Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ பப்பாளி பாட்டி வைத்தியம் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ பப்பாளி பாட்டி வைத்தியம் ~ (Read 522 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226857
Total likes: 29028
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ பப்பாளி பாட்டி வைத்தியம் ~
«
on:
July 03, 2015, 07:20:23 PM »
பப்பாளி பாட்டி வைத்தியம்
1. அழகுக்கு
தினமும் பப்பாளி பழத்தின் சதைப்பகுதி எடுத்து முகத்தில் தேய்த்து வைத்து கால்மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகம் பளிச்சென
மாறிவிடும் .
2. அடங்கியுள்ள சத்துக்கள்
பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ்(பழச்சர்க்கரை.)
விட்டமின் ஏ அதிகமாக உள்ளது
கனியக் கனிய விட்டமின் சி கூடும்.
100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விற்றமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விட்டமின் பி1, விட்டமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன.
பச்சைக் காயிலுள்ள பாலில், செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள்(என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும்.
நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.
3. மருத்துவப் பண்புகள்
◘ பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
◘ பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
◘ பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
◘ பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
◘ பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
◘ பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
◘ பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
◘ பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
◘ பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
◘ பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
◘ நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
◘ பித்தத்தைப் போக்கும்.
◘ உடலுக்குத் தென்பூட்டும்.
◘ இதயத்திற்கு நல்லது.
◘ மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
◘ கல்லீரலுக்கும் ஏற்றது.
◘ பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
◘ தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
◘ கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
◘ சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
◘ முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
◘ இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
◘ மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.
◘ பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்
◘ பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும்,
◘ ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
◘ பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
◘ இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். ◘ உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
◘ இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
◘ ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
◘ நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
◘ பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ பப்பாளி பாட்டி வைத்தியம் ~