Author Topic: ~ சென்னை மீன் கறி ~  (Read 465 times)

Offline MysteRy

~ சென்னை மீன் கறி ~
« on: June 29, 2015, 10:18:22 PM »
சென்னை மீன் கறி



மீன் – 1/2 kg
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் – 2 tsp
மஞ்சள் தூள் – 1/2 tsp
மல்லித் தூள் – 1 tsp
வெங்காயம் – 150 g
தக்காளி – 150 g
வெந்தயம் – 1 tsp
கடுகு – 1 tsp
மிளகு – 2 tsp
சீரகம் – 1 tsp
காய்ந்த மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 3
எண்ணெய் – 1 tbsp
வெல்லம் – 1 tsp
உப்பு – தேவையான அளவு
கருவேப்பில்லை – 1
இணுக்கு மல்லி இலை – 2 tsp


செய்முறை:

புளியை கரைத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து கலக்கி வைக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு கருவேப்பில்லை காய்ந்த மிளகாய் மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். கரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து, கீறிய பச்சை மிளகாய், மீன் துண்டங்கள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மீன் வெந்ததும் கடைசியாக சீரக தூள் மற்றும் மிளகு தூள் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்