Author Topic: சாய் பல்லவி  (Read 3066 times)

Offline Dong லீ

Re: தேவதை
« Reply #15 on: September 25, 2015, 12:51:30 AM »
அவள் வளர்க்கும் மீன்கள்
தங்கமீன்களாய் மாறிப்போனது !!
மீன்களை தொட்டியில் எட்டி பார்த்து
அவள் ரசித்த கணம்
மின்னும் அவள் நெற்றி உதிர்த்த
வியர்வை துளிகள் கலந்த நீரில் 
 அந்த மீன்கள் வாழ்வதினால் !!
« Last Edit: September 25, 2015, 12:54:24 AM by Dong லீ »

Offline SweeTie

Re: சாய் பல்லவி
« Reply #16 on: September 25, 2015, 02:00:54 AM »
உப்பு தண்ணீரில் வளரும் தங்க மீன்களுக்கு வாழ்த்துக்கள்
அந்த மீன்களை வளர்க்கும் சாய்பல்லவிக்கும்  வாழ்த்துக்கள்
சாய் பல்லவியின் நினைவில் வாடும் டாங் லீ கும் வாழ்த்துக்கள்
உங்கள் கவிதைக்கு  உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்

Offline NiThiLa

Re: சாய் பல்லவி
« Reply #17 on: September 25, 2015, 09:08:47 AM »
வார்த்தையில்லை தோழரே தங்கள் அன்பு தெரிகின்றது கவியில் நிச்சயம் இதயம் கனியும் என்று நினைக்கிறேன் சாய் பல்லவிக்கு .வந்தனனகள் தோழரே தங்கள் புலமைக்கு

Offline Dong லீ

Re: சாய் பல்லவி
« Reply #18 on: September 26, 2015, 09:10:08 PM »
மழலைக்கு அவளிட்ட முத்தம்
 
முத்தமிட
குவிந்த அவள் உதட்டின்
வரி பள்ளத்தில்
விழுந்தது என் இதயம்

செல்லமாய் அவள் புன்னகைக்க
விரிந்த அவள் உதட்டின்
வரி பள்ளங்கள்
இடம் மாறி
இரு கன்னங்களில்
குழியாக குடியேற
என் இதயமும்
தடம் மாறி சிக்கிக்கொண்டது
அவள் கன்னக்குழியில்

Offline SweeTie

Re: சாய் பல்லவி
« Reply #19 on: September 26, 2015, 09:38:23 PM »
சிக்கிக்கொண்ட இதயம் சிக்கியதாகவே இருக்கட்டும்
மழலைக்கு இட்ட முத்தம்  ஒரு நாள் உங்களுக்கும் வரலாம்
அல்லவா   காத்திருங்கள்... வாழ்த்துகள் .....   :D :D

Offline JoKe GuY

Re: சாய் பல்லவி
« Reply #20 on: September 29, 2015, 07:18:57 PM »
உங்களின் கவிதை பூக்கள் இன்னும் பூக்க வேண்டும் தோழரே.வாழ்துக்கள்
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline Dong லீ

Re: சாய் பல்லவி
« Reply #21 on: March 29, 2017, 06:09:13 PM »
தொடர முயற்சிப்போம்  :-\

Offline JeSiNa

Re: சாய் பல்லவி
« Reply #22 on: March 29, 2017, 06:22:57 PM »
Sprr brw sema linez onum onum sema.. :-[

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: சாய் பல்லவி
« Reply #23 on: March 30, 2017, 11:41:11 PM »
So Paul na kavithai amarkalam;) semaya matikitinga pola:)

Offline Dong லீ

Re: சாய் பல்லவி
« Reply #24 on: April 02, 2017, 08:23:17 PM »
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியில் பதிவிட்ட கவிதைகளை இங்கு என் வசதிக்காக ஒன்று சேர்க்க நினைக்கிறேன்

தொடரும் பதிவு அப்படி ஒரு ஓவியம் நிகழ்ச்சியில் பதிவிட்ட காதல் கவிதை (?)

Offline Dong லீ

Re: சாய் பல்லவி
« Reply #25 on: April 02, 2017, 08:26:22 PM »
காதலியின் கவிதை :

இணையாக இருந்தும்
இணையாமல் இருக்கும்
தண்டவாளங்களும்
பொறாமை கொள்ளும் !
தலைவா நம் காதலை வியந்து  !!

அன்பே ! என் விரல் இடுக்கில்
காதலை நிரப்பும் உன் விரல்கள்!!
மேலும் நிரப்பிவிடு- உன் 
மூச்சுக்காற்றால் 
என் குளிர்காலங்களை !
புன்சிரிப்பால்
என் விடியல்களை !
கனவுகளால்
என் இரவுகளை!
உயிராய்
என் உலகங்களை !

காதலியின் மைண்ட் வாய்ஸ்

மேலும் நிரப்பிவிடு
உன் பணத்தால்
என் வங்கி கணக்கை !
கை விடமாட்டேன்
விட்டால் ஓடிவிடுவான் !!

காதலன் கவிதை :

அன்பே நீ ஒரு ரயில் !
உன்னை அனுதினமும் சுமக்கும்
தண்டவாளமாய் நான் இருந்தால் போதும் !

அன்பே நீ ஒரு குயில் !
உன் மூச்சை சுமக்கும்
இசையை நான் இருந்தால் போதும் !

அன்பே நீ ஒரு மயில் !
உன் தோகை உதிர்க்கும்
சிறு இதழாய் நான் இருந்தால் போதும் !

காதலன் மைண்ட் வாய்ஸ் :

நான்  எழுதுவது கவிதை தானா?அல்லது
இது கவிதை என்று
என்னை நானே ஏமாற்றி கொண்டிருக்கிறேனா?
அன்பே உன் முகலச்சனதிற்க்கு இது
கவிதை 'மாதிரி' இருந்தாலே போதும் !!

ஆர் ஜே மைண்ட் வாய்ஸ் :

நீ கவிதை எழுதாமல் இருந்தால் போதும் !!

Offline Dong லீ

Re: சாய் பல்லவி
« Reply #26 on: April 02, 2017, 08:33:00 PM »
கல்யாணி !
உனக்கு ஒரு கவிதை -பை நெப்போலியன் ..


"உச்சந்தலையை உருக்கிடும்
உச்சி வெயிலில்
குச்சி ஐசும் நீர் மோருமாய்
உன்னை நான் கண்டேன் !

என்னுள் நீ
அணுக்கள் தோறும்
கலந்திட 
கால்கள் தள்ளாடி
தடுமாறினேன் !

உன் இருப்பில்
எனையே மறக்கலானேன் !
உன் மயக்கத்தில்
நடுதெருவிலும் விழுந்து
சாலையை அனைக்கலானேன் !

உன் இன்மையில்
என் கண்கள் வியர்க்கலானேன்
கைகள் நடுங்கலானேன் !

நீ தரும் போதை
அனுதினமும் வேண்டும்
எனை என்றும்
பிரியாதே !! "



கடிதத்தை படித்து முடித்தவள்
சீறும் கோபமுமாய் சீறினாள்
"அட குடிகார நாயே
நான் கல்யாணியின் அம்மா "!!


அத முதல்லையே சொல்ல கூடாதாமா?

பின்னொரு நாளில்
மீண்டும் ஒரு  கடிதம் டு கல்யாணி
பை நெப்போலியன்


"அன்பே கல்யாணி
நீயென நினைத்து
உன் அன்னை சுமதியிடம்
கடிதம் கொடுத்ததை எண்ணி
வருந்துகிறேன் "

கடிதத்தை படித்து முடித்தவள்
சீறும் கோபமுமாய்
சீறினாள்
"அட குடிகார கபோதி
நான் சுமதியின் அம்மா "!!



குடி குடியை கெடுக்கும் !
போதையில் கண் முன் தெரியாமல்
காதலியின்  தாயிடமும் பாட்டியிடமும்
 காதல் கடிதம் கொடுத்தால்
குடி போட்டியை கூட எடுக்கும் !

பொதுநலன் கருதி வெளியிடுவோர்
பூஸ்ட் குடிக்கும் புலவர் சங்கம்
 

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: சாய் பல்லவி
« Reply #27 on: April 07, 2017, 12:20:19 AM »
Paul na ;D epdi na ipdi eluthuringa ;) super na :) ipdi kavithaigal na enaku rmba pudikum na:) so unga kavithaikaluku ennoda best wishes na:) thodarnthu amarkalama eluthungu;)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: சாய் பல்லவி
« Reply #28 on: April 08, 2017, 06:59:03 PM »
அண்ணா வணக்கம்.....

கவிதைக்கான கருத்துக்கள்
வாழ்த்துக்கள்.....
பாராட்டுக்கள்.....
அரும்பிக்கொண்டு உள்ளது.....
விரைவில் பிரசவமாகும்.....


இப்போது ஒரே ஒரு கருத்து மட்டும்
மலர் ஆசிரியையின் புகைப்படத்தெரிவு.....


போதுமான அழகு.....
பேரழகி இல்லை
அடக்கத்தின் விம்பம்.....


நம் இனத்தின் பெரும்தொகை
பெண்களின் சாயல்.....


அன்பானவற்றை.....
இயல்பானவற்றை.....
முழுமையானவற்றை.....
உண்மையானவற்றை.....
இரசிக்கும் உங்கள் இதயத்தை காண்கின்றேன்.....


அண்ணி.....
புண்ணியம் செய்திருக்காங்க.....
வாழ்த்துக்கள் அண்ணா.....
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: சாய் பல்லவி
« Reply #29 on: April 22, 2017, 04:00:11 PM »
வணக்கம் அண்ணா,

என் விரல்கள் இப்போது

கூந்தலை கலைத்து ஓடிவந்த தென்றல்
பூ வாசத்தோடு தேனையும் அள்ளிவந்ததோ
வண்டுகள் மொய்த்திட

என்ன வர்ணணை அழகிய அழகு
கடுகில் செதுக்கிய சிற்பம் போன்ற வரி

உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....