Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
ஆன்மீகம் - Spiritual
»
~ பூஜை செய்யும் போது ஏன் மணி அடிக்கிறோம்'' ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ பூஜை செய்யும் போது ஏன் மணி அடிக்கிறோம்'' ~ (Read 976 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 224504
Total likes: 28237
Total likes: 28237
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ பூஜை செய்யும் போது ஏன் மணி அடிக்கிறோம்'' ~
«
on:
June 24, 2015, 09:20:25 PM »
பூஜை செய்யும் போது ஏன் மணி அடிக்கிறோம்''
ஆலயங்களிலோ அல்லது நமது வீடுகளிலோ பூஜை செய்யும் போது மணி அடிப்பது என்ற வழக்கம் உள்ளது.
பூஜையின் தொடக்கத்தில் ஒரு முறை மணி அடிக்கிறோம். இந்த மணி அடிக்கும் போது ஒரு சுலோகத்தையும் சொல்கிறோம். அந்த சுலோகத்தையும் அதன் அர்த்தத்தையும் நாம் தெரிந்து கொண்டாலே அப்போது மணி அடிப்பதன் தாத்பர்யம் புரிந்துவிடும்.
வலக்கையில் மணிகை எடுத்து அடிக்கத் தொடங்குமுன் ஒரு சில நியமங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அதாவது அந்த மணிக்குப் பூஜை செய்ய வேண்டும்.
மணியின் மேல் பகுதியில் ஒரு திருஉருவம் செதுக்கப்பட்டிருக்கும்.
சிவாலயங்களில் பயன்படுத்தப்படும் மணியில் நந்தியின் திருஉருவம் செதுக்கப்பட்டிருக்கும்.
வைணவ ஆலயங்களில் உள்ள மணியில் சங்கு, சக்கரம், கருடன் ஆகியவற்றின் திருவுருவம் இகுக்கும்.
அந்தத் திருவுருவின் மீது கலச நீரை ஒரு உத்தரணி அளவு ப்ரோசித்து மணியின் நாவையும் ஜலத்தால் ப்ரோசித்து சந்தனம், குங்குமம் அணிவிக்க வேண்டும். பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர் தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும்.
துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; எனவே, ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர்.
ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்து விடும். மறுநாள், மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும்.
அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், அவை இருக்குமிடத்தில் தேவதைகள் வரமாட்டார்கள்!
அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம். கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆலயங்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் ஓடி விடும். மறுபடியும் எப்போது திரும்பி வரும் என்று யாரும் சொல்லவில்லை.
இருந்தாலும், அவை வந்து விடும் என்று மட்டும் சொல்கின்றனர்.
Logged
(1 person liked this)
(1 person liked this)
EmiNeM
Full Member
Posts: 169
Total likes: 489
Total likes: 489
Karma: +0/-0
Gender:
Re: ~ பூஜை செய்யும் போது ஏன் மணி அடிக்கிறோம்'' ~
«
Reply #1 on:
June 08, 2016, 02:03:11 AM »
intha pisasu peyi ellam yean kadavul pakkathulaye irukunga...mani adichu mudicha thirumbi vandudatha..
Logged
(1 person liked this)
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
ஆன்மீகம் - Spiritual
»
~ பூஜை செய்யும் போது ஏன் மணி அடிக்கிறோம்'' ~