Author Topic: ~ ஆறு மாதக் குழந்தைகளுக்கு வீட்டிலேயே மாற்று உணவு! ~  (Read 496 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226858
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆறு மாதக் குழந்தைகளுக்கு வீட்டிலேயே மாற்று உணவு!



வீட்டிலேயே மாற்று உணவு!

ஆறு மாதக் குழந்தைகளுக்கு, இணை உணவை வீட்டிலேயே தயாரித்துக் கொடுப்பது ஒன்றே சிறந்தது. அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சிறு பருப்பு, துவரம் பருப்பு, பொட்டுக்கடலை இவற்றைத் தலா 100 கிராம் எடுத்து, நன்றாகக் கழுவி, காயவைத்து, தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். பிறகு ஒன்றாகச் சேர்த்து அரைத்து, காற்றுப் புகாத டப்பாவில் வைத்துப் பயன்படுத்தலாம்.
மாதம் ஒருமுறை புதிதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

 ஆறு மாதங்களுக்கு மேல், இணை உணவாக ஏதாவது தரலாம்
 பருப்பு சாதத்தை நெய் விட்டு, குழந்தைக்குக் கொடுக்கலாம். நன்கு வேகவைக்கப்பட்டு, மசித்த பச்சைப் பட்டாணியும் குழந்தைக்கு நல்லது. உருளை, கேரட், மஞ்சள் பூசணி போன்ற காய்களை வேக வைத்து, தோல் நீக்கிய பின், நன்கு மசித்துத் தரலாம். அரிசி இரண்டாக உடைக்கப்பட்ட நொய் கஞ்சி தரலாம். இதை, இளஞ்சூடான பதத்தில் குழந்தைக்குத் தருவதே நல்லது. பழங்கள், பழச்சாறுகளைக் குடிக்கக் கொடுக்கலாம். சத்துமாவு கஞ்சி, கேழ்வரகு கஞ்சி போன்றவற்றைக் கொடுக்கலாம்.

முன்பெல்லாம் தாய்ப்பாலுக்குப் பிறகு குழந்தைகளுக்கு அன்றாடம் சாப்பிடும் உணவையே, எண்ணெயும் காரமும் இல்லாமல் கொடுத்தனர். அப்போது எந்த பால் பவுடர்களும் ஆயத்த பவுடர்களும் இருந்தது இல்லை. நாம் சாப்பிடும் அன்றாட உணவையே நன்கு மசித்து புளிப்பு, காரம், எண்ணெய் இல்லாமல் கொடுத்தாலே போதும்.

 பழச்சாறு, கஞ்சி, கூழ் போன்ற எதைக் கொடுத்தாலும், நன்றாகக் கொதிக்கவைத்து, ஆறவைத்த நீரில் கலந்து கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.