Author Topic: ~ ஐந்து இலை குழம்பு ~  (Read 403 times)

Offline MysteRy

~ ஐந்து இலை குழம்பு ~
« on: June 16, 2015, 04:52:56 PM »
ஐந்து இலை குழம்பு



தேவையானவை:

மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் (எல்லா இலைகளும் சேர்த்து) - ஒரு கப், புளி - சிறிதளவு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். அத்துடன் மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி எடுத்து... புளி, உப்பு சேர்த்து மிக்ஸி யில் அரைக்கவும். அரைத்த விழுதில் தண்ணீரை (ஒன்று அல்லது ஒன்றரை டம்ளர்) கலக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளித்து, அரைத்த கலவையை அதில் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு, இறக்கிப் பரிமாறவும்.
இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.