Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 142548 times)

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #555 on: May 25, 2025, 04:33:30 PM »
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.   

காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்



அடுத்த குறள்     
🪷 இடு--------  இடும்பை ----------- இடும்------
இடும்பை--------    ----வர். 

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #556 on: May 26, 2025, 10:19:56 AM »
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

இடையூறுகள் வந்த போது அதற்காக வருந்தாத மனத்தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள்...


அடுத்த குறள்:-
_______ நாடாமால் ________என்னொருவன்
________ கல்லாத _____

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #557 on: May 27, 2025, 10:38:03 PM »
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.   

கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.


அடுத்த குறள்   
🪷கள--------  ------------ ஆக்கம் ------------
ஆவது ------------ கெடும்.


Offline Vethanisha

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #558 on: June 06, 2025, 07:29:56 AM »
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்


திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும். 
— சாலமன் பாப்பையா


சிறுமையுவு ______  இன்சொல் ______
இம்மையும் _______

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #559 on: June 06, 2025, 12:39:42 PM »
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்


பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்


அடுத்த குறள்
🪷 ----------ற்கும் ------------- அடை----------- ஆர்வலர்
புன்------  ------- தரும்

Offline Thooriga

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #560 on: June 19, 2025, 11:59:43 AM »
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்


அடுத்த குறள்

___________நாணுதல் __________ திருநுதல்
_________ ___________பிற

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #561 on: June 19, 2025, 11:20:38 PM »
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற

இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.



அடுத்த குறள்
🪷 புறங்--------- பொய்------------வாழ்தலின் ----------
அறங்--------------  -----------  தரும்



Offline Yazhini

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #562 on: June 28, 2025, 06:27:51 PM »
அதிகாரம் : 19 - புறங்கூறாமை
குறட்பா : 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்


விளக்கம் :
   ஒருவன் இல்லாதபோது அவனைப் பழித்துக் கூறி, அவனைக் காணும் போது நல்லவனாக நடித்து உயிர் வாழ்தலினும், அவ்வாறு செய்யாமல் இறந்து போதல் அவனுக்கு அறநூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும்.


அடுத்த குறள்:
ஒருமைக்கண் ________ _______ ஒருவற்கு
________ ஏமாப் புடைத்து.
« Last Edit: June 28, 2025, 06:35:45 PM by Yazhini »

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #563 on: June 29, 2025, 01:12:04 PM »
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.   
ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும்



அடுத்த குறள்
🪷  அழுக்கா ------------கண் ஆக்கம்--------
இல்லை
ஒழுக்க ------------- உயர்வு