கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.
விளக்கம் :பகைவர்கள், மற்றும் இயற்கை அழிவுகள் போன்ற, எவ்வித கேடுகளும் இல்லாததும், அப்படியே அவை நேருமாயின், அவற்றாலும் நாட்டினுடைய பெருக்கமும், வளப்பமும் குன்றாத நாடே, எல்லா நாடுகளிலும் சிறந்த நாடாகக் கொள்ளப்படும். எளிய குறளால், தலை சிறந்த நாடு எது என்பதைச் சொல்லுகிற குறள். கேடறியா நாடுகள் உள்ளனவா என்பது கேள்விக்குறியே.
ஆயினும், பகைவர்களாலும், இயற்கை அழிவுகளாலும், உள்ளூர் அரசியல் சுரண்டுதல்களாலும் எவ்வளவு கேடுகள் வந்தாலும் சில நாடுகள் தங்கள் இயற்கையாக உள்ள வளங்களையும் வனப்பினையும் இழப்பதில்லை. ஆயினும் குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பது போல், முடிவில் அந்த வளப்பமும், வனப்பும் கூட காணாமல் போகலாம் என்று யோசிக்க வைக்கின்ற குறள்.
................. வென்றிடினும் ............. வென்றதூஉம்
தூண்டிற்பொன் ................. .................