Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 100390 times)

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #30 on: November 07, 2011, 07:53:11 PM »
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.


எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓம்பின் ...........     ...........  மற்றவர்
நீங்கின்.......   ..........


Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #31 on: November 08, 2011, 08:39:01 AM »
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

கேடும் ........   ..........  ..........
கோடாமை .......... கணி.


Offline தாமரை

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #32 on: November 08, 2011, 10:10:44 AM »
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி


கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.


வாணிகம் ------------- வாணிகம் ----------
பிறவும் -------- செயின்.

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #33 on: November 08, 2011, 10:22:36 AM »
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்  பிறவும் தம்போல் செயின். 
 
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால் அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல முறையாகும்.

 
காலத்தி ..............   ...........    சிறிதெனினும்
ஞாலத்தின் .........         ...............


Offline தாமரை

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #34 on: November 08, 2011, 10:42:02 AM »
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்



செய்யாமல் ------ உதவிக்கு ------------
--------- ஆற்றல் ---------

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #35 on: November 08, 2011, 05:54:53 PM »
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

நிறையுடையேன் .........     ........   ..........
மறையிறந்து ....... படும்.


Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #36 on: November 08, 2011, 07:31:18 PM »
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.


இனிய ..........       ..............    கூறல்-
கனி இருப்ப, ..........   ...................
« Last Edit: November 08, 2011, 07:40:24 PM by Anu »


Offline தாமரை

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #37 on: November 08, 2011, 07:44:37 PM »
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

 இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

------- நன்றி பயக்கும் --------
பண்பின் ----------- சொல்.

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #38 on: November 09, 2011, 10:15:23 AM »
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.


இன்சொல் ............  .............   ..........
வன்சொல் ....... வது

Offline Karthika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #39 on: November 09, 2011, 10:33:59 AM »
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.


இரத்தலின் .............. நிரப்பிய
.................... உணல்.

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #40 on: November 09, 2011, 11:34:55 AM »
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.


மனத்தது ......... .............. .........
மறைந்தொழுகு ........ பலர்.


Offline தாமரை

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #41 on: November 09, 2011, 06:50:39 PM »
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.


நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.



    ------- கண்டனைய ரேனும் ------------
    ------------- ருடைத்து.

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #42 on: November 09, 2011, 08:10:33 PM »
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து.

புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.


விடுமாற்றம் ...........   ............... வடுமாற்றம்
..............   .......... ணவன்.


Offline தாமரை

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #43 on: November 10, 2011, 09:54:02 PM »
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்


குற்றமான சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.




கடன்அறிந்து-------கருதி -----------
எண்ணி ------------------.

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #44 on: November 10, 2011, 11:41:36 PM »
கடனறிந்து காலங் கருதி இடனறிந்
தெண்ணி உரைப்பான் தலை.

தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.


விரைந்து ................   ............ நிரந்தினிது
சொல்லுதல் .......   ........