Author Topic: ~ மொச்சை சுண்டல் ~  (Read 491 times)

Offline MysteRy

~ மொச்சை சுண்டல் ~
« on: May 25, 2015, 07:17:33 PM »
மொச்சை சுண்டல்



தேவையான பொருட்கள்:

மொச்சை - 1 கப்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 3 ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

• மொச்சையை முதல் நாளே ஊற வைத்துவிட வேண்டும். ஊறிய பிறகு நன்றாகக் கழுவி உப்பு போட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விட வேண்டும்.

• ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.

• இதை மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ் ஆகக் கொடுக்கலாம்.