Author Topic: ~ ஹோம்மேடு வெந்தயக் கீரை! சாமை தயிர் சோறு!! பனிவரகு பால் பணியாரம்!! ~  (Read 465 times)

Offline MysteRy

பனிவரகு பால் பணியாரம்

தேவையான பொருட்கள்:

பனிவரகு அரிசி - 150 கிராம்
உளுந்து - 50 கிராம்
வெந்தயம் - 1 டீ ஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
பால் - 300 மி.லி
வெல்லம் - 100 கிராம்



செய்முறை:

* பனிவரகு அரிசியை ஆறு மணி நேரமும், உளுந்து மற்றும் வெந்தயத்தை அரை மணி நேரமும் ஊறவைத்துக் கொள்ளவும்.
*  இவற்றை இட்லிமாவுப் பதத்துக்கு அரைத்து, உப்பு சேர்த்து புளிக்கவைத்து பணியாரக் கல்லில் சுட்டெடுக்கவும்.
*  பாலை நன்கு காய்ச்சி வெதுவெதுப்பாக இருக்கும்போது, வெல்லத்தைக் கரைத்து பணியாரத்தை ஊறவிடவும்.
எலும்பை வலுப்படுத்தவும், செல்களைப் புதுப்பிக்கவும், ஜீரணத்தை ஓழுங்குபடுத்தவும் ஹார்மோன் சுரப்பிகளைச் சமநிலைப்படுத்தவும் உதவும் பாஸ்பரஸ் இதில் நிறைந்திருக்கிறது. நார் சத்து, புரதம், இரும்புச்சத்து என எல்லா சத்துக்களும் கலந்த உணவு இது.

Offline MysteRy

சாமை தயிர் சோறு

தேவையான பொருட்கள்:

பனிவரகு அரிசி - 150 கிராம்

சாமை பச்சை அரிசி - 150 கிராம்
பால் - 1 டம்ளர்
தயிர் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1 சிட்டிகை



செய்முறை:

* சாமை அரிசியை சுத்தம்செய்து மூன்று டம்ளர் நீர் சேர்த்து நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.
* சோறு குளிர்ந்த பிறகு, பால் மற்றும் தயிர், பெருங்காயம் சேர்த்து கையால் நன்கு கலக்கி உப்பு சேர்க்கவும்.
* கொத்தமல்லி, மாதுளை, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி சேர்த்துப் பரிமாறவும்.
இரும்புச்சத்து அதிகம் உள்ள சிறுதானியம் இது. ரத்தசோகையைக் குறைக்கும் என்பதால், பெண்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். கோடையில் தயிரின் குளிர்ச்சியும் சுண்ணாம்புச்சத்தின் பயனும் ஒருசேரக் கிடைக்கும்.

Offline MysteRy

ஹோம்மேடு வெந்தயக் கீரை!



ஸ்வீட் பாக்ஸ் போன்ற டப்பா ஏதேனும் தேர்ந்தெடுத்து, அதன் அடிப்பக்கம் நான்கு மூலையிலும் ஓட்டை போட்டுக்கொள்ளவும். அதில் மண்ணுடன் தேங்காய்நார்க் கழிவு, மண்புழு உரம், இலைதழை மக்கு, மக்கிய சமையலறைக் கழிவு என கிடைக்கும் உரங்களைப் போட வேண்டும். அதன் மேல் ஓரு கைப்பிடி வெந்தயத்தைத் தூவி கையால் கிளறி சமப்படுத்தி, பால்கனியில் வைத்து, தினம் தினம் கைப்பிடி தண்ணீர் தெளித்துவந்தால்,
15 நாட்களில் குளிர்ச்சியான, ரத்தசோகையை அண்ட விடாத வெந்தயக்கீரை வளர்ந்து நிற்கும். புளிக் குழம்பு, பொரியல், சப்பாத்தி, கூட்டு... என வகை வகையாக ஆர்கானிக் வெந்தயக் கீரையில் பைசா செலவு இல்லாமல் சமைக்கலாம்!