Author Topic: ~ கிச்சன் கில்லாடி! நெல்லிக்கனி அப்பம்! ~  (Read 398 times)

Offline MysteRy

கிச்சன் கில்லாடி! நெல்லிக்கனி அப்பம்!



செய்முறை:

கோதுமை மாவில் உப்பு, நெய் கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து தனியே வைத்துக்கொள்ளுங்கள். நெல்லிக்காய்களை தண்ணீரில் கழுவி துடைத்து அதன் சதைப்பகுதிகளை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேக வைத்து எடுத்து, கைகளால் நன்கு மசித்துக் கொள்ளுங்கள். அடுப்பில் கடாயை வைத்து வெல்லத்தைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி வடிகட்டி கொள்ளுங்கள். இந்தப் பாகை கடாயில் சேர்த்து மறுபடியும் கொதிக்க விட்டு வேக வைத்த நெல்லிக்காய்களை அதில் சேர்த்து சற்று கெட்டிப் பதம் வரும் போது பொட்டுக்கடலை மாவு, நெய் சேர்த்து கிளறி இறக்குங்கள். ஆறியதும் இந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய வட்ட பூரிகளாக தேய்த்துக் கொள்ளுங்கள். ஒரு பூரியின் மீது நெல்லிக்காய் கலவை உருண்டையை வைத்து அதன் மீது மற்றொரு பூரியை வைத்து மெதுவாக அழுத்தி, நெல்லிக்கனி பூரணம் இரண்டு பூரிகளுக்கு நடுவே நன்கு பரவி ஒட்டுமாறு தேய்க்கவும். பூரிகளின் ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டிவிட்டால் உள்ளே இருக்கும் பூரணம் வெளியே சிதறாது)  அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை மிதமாக்கி பூரிகளைப் போட்டு இரண்டு புறமும் வேகவைத்து பொரித்தெடுக்கவும்.