என்னை விட்டு
இன்னும் தொலைவாக
சென்று விடு
கவலையில்லை..
நேசித்துக் கொண்டே
இருப்பேன் நான்.......
ஒருவேளை நீ
திரும்பி வர நேரிட்டால்
தொலைவின் துயரம்
உணர்வாய் நீ.....
பிரிவின் வலி
தந்தாய்....
நினைவுகளில்
நீ இருப்பதால்
சோகத்தைக் கூட
சுகமாக்கிக் கொண்டேன்........