Author Topic: ~ கீரைப் பொங்கல் ~  (Read 503 times)

Online MysteRy

~ கீரைப் பொங்கல் ~
« on: April 28, 2015, 09:10:33 PM »
கீரைப் பொங்கல்



தேவையானவை:

 பச்சரிசி - அரை கப், பாசிப்பருப்பு - கால் கப், பொடியாக நறுக்கிய ஏதாவது ஒரு கீரை - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, மிளகு - சீரகப் பொடி - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

 குக்கரில் நெய் விட்டு, மிளகு - சீரகப் பொடி, கீறிய பச்சை மிளகாய், கீரை, மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதித்ததும் கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்.