Author Topic: ~ மீன் சூப் ~  (Read 374 times)

Offline MysteRy

~ மீன் சூப் ~
« on: April 24, 2015, 11:51:53 AM »
மீன் சூப்



தேவையான பொருட்கள்

வஞ்சிரம் மீன் – 1/4 கிலோ
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 1
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை

மீனை நன்றாகக் கழுவி சற்று பெரிய துண்டங்களாகப் போடவும், மிளகு, சீரகம், பூண்டை தட்டிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை 4 கப் நீரில் தண்ணியாக கரைக்கவும் இதில் தட்டிய மிளகு, சீரகம், பூண்டு, நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். நுரை வருவதற்கு சற்று முன்பாக மீன் துண்டங்களை சேர்க்கவும். இரண்டு நிமிடத்தில் மீன் வெந்து மேலே மிதக்கும். உடனே அடுப்பை அணைக்கவும். இல்லையென்றால் மீன் கரைந்து விடும். எண்ணெயில் மிளகாய் வற்றலை சிறிது இடித்துச் சேர்த்து கடுகு தாளித்து சூப்பில் ஊற்றி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.