Author Topic: ~ ஆட்டுக்கால் சூப்! ~  (Read 413 times)

Offline MysteRy

~ ஆட்டுக்கால் சூப்! ~
« on: April 24, 2015, 11:43:37 AM »
ஆட்டுக்கால் சூப்!



தேவையான பொருட்கள்

ஆட்டுக்கால் – 1 செட் (4 கால்)
மிளகு – 2- 3 தேக்கரண்டி
வர கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
பூண்டு – 6 பல்
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 1 (விரும்பினால்)
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
மல்லி இலை – சிறிது
கருவேப்பிலை – 2 இணுக்கு

செய்முறை

கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும்.
ஐந்து வெங்காயம் மட்டும் வெட்டி வைக்கவும்.மீதியை அரைக்க முழுதாக வைக்கவும்.
மிளகு, சீரகம், வரகொத்தமல்லி ஆகியவற்றை லேசாக வதக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் மூன்றையும் போட்டு , வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
குக்கரில் ஒரு லிட்டர் அளவுக்கு (கால் மூழ்கும் அளவுக்கு சிறிது கூட) தண்ணீர் வைத்து உப்பு போடாமல், அரைத்த மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
இரண்டு விசில் வந்தவுடன் அரைமணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியவுடன் திறக்கவும். உப்பு சேர்க்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெட்டி வைத்துள்ள வெங்காயம், கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.
கொஞ்சம் திக்காக வேண்டும் என்றால் 2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றலாம் அல்லது கார்ன் மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான, சத்தான ஆட்டுக்கால் சூப் ரெடி.