Author Topic: ~ தலைக்கறி குழம்பு ~  (Read 417 times)

Offline MysteRy

~ தலைக்கறி குழம்பு ~
« on: April 24, 2015, 11:39:52 AM »
தலைக்கறி குழம்பு



தேவையான பொருட்கள்

தலைக்கறி - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
நாட்டுத் தக்காளி – 200 கிராம்
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
மல்லித் தூள் - ஒன்றரை ஸ்பூன்
பட்டை - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி கரைசல் – 2 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது

தலைக்கறி குழம்பு செய்முறை

மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஆகியவற்றை நைசாக அரைக்கவும். தேங்காயைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை தாளித்து, வெங்காயம் வதக்கி, அரைத்த மசாலா, மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கி, தக்காளி, தலைக்கறி, உப்பு சேர்த்து நன்கு கிளறி 3 தம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு வெந்த பிறகு இறக்கி அரைத்த தேங்காய், புளி கரைசல் ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு கருவேப்பிலை தூவி இறக்கவும்