Author Topic: ~ காடை குழம்பு ~  (Read 361 times)

Offline MysteRy

~ காடை குழம்பு ~
« on: April 23, 2015, 11:35:51 PM »
காடை குழம்பு



கறிவேப்பிலை

மிளகுத்தூள் – 2 மே.கரண்டி
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
தனியாத்தூள் – 1ஸ்பூன்
தயிர் – 1/4கப்
மிளகாய்த்தூள் – 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் – 1/4 ஸ்பூன்
தேங்காய் பால் – 1/2 கப்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

காடை குழம்பு

செய்முறை:

1.காடையினை நன்றாக சுத்தம் செய்து மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக விரவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

2.பிறகு ஒரு பாத்திரத்தில் தேவைக்கு எண்ணெய் ஊற்றி காயந்த பின்பு வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும் பிறகு பச்ச மிளகாய், கறிவேப்பிலை தயிர், தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
3.தக்காளி கனிந்த பின்பு மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

4.நன்றாக வதங்கிய பின்பு பிரட்டி வைத்த காடை கலவையினை சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

5.இதனுடன் தேங்காய் பால் ஊற்றி 15 நிமிடம் சிம்மில் வைக்கவும்.

காடை ஆணம் எண்ணெய் விடும் பொழுது அடுப்பினை அணைக்கவும்.

சுவையான ஸ்பெசியான காடை குழம்பு ரெடி… சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.