Author Topic: காதல் நாடகம்  (Read 501 times)

Offline thamilan

காதல் நாடகம்
« on: April 18, 2015, 07:33:27 PM »
எனக்கும் உனக்கும்
தெரிந்த
ஒரு ரகசியம்
உண்டு
நான் உன்னை காதலிப்பதும்
நீ என்னை காதலிப்பதும் தானது
ஆனாலும்
நான் காதலிப்பது தெரியாதது போல
நீ நடிக்கிறாய்
நீ காதலிப்பது தெரியாதது போல
நான் நடிக்கிறேன்
காதல் நாடகத்தில்
நடிகர்களாகிய நமக்கிடையில்
திரைகள் எதுக்கு?