Author Topic: ~ சர்க்கரைப் பொங்கல் ~  (Read 354 times)

Offline MysteRy

~ சர்க்கரைப் பொங்கல் ~
« on: April 14, 2015, 11:17:44 PM »
சர்க்கரைப் பொங்கல்



பொங்கல் திருநாள். எங்கள் வீட்டில் பொங்கலுக்கான வேலைகள் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துவிடும். பூஜைக்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து எல்லாம் அப்பா வாங்கி வருவார்.அம்மா மாவிலைத் தோரணம், ஆவாரம் பூ,வேப்பம் பூ சேர்த்து கட்டி வீட்டின் நிலைகளில் தொங்கவிட்டு அழகு செய்வாங்க. பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து புத்தாடை கட்டி, வாசலில் கலர் கோலம் எல்லாம் போட்டு, பொங்கல் வைக்க ஆரம்பிச்சிடுவாங்க.

8-8:30 மணிக்கெல்லாம் பொங்கல் சுடச்சுட தயாராகி விடும். அழகான தலைவாழை இலையிட்டு, அதில் தித்திப்பான சர்க்கரைப் பொங்கலும், கொஞ்சம் தேங்காய்ச் சில்லும் அம்மா கீறி வைப்பாங்க. ம்ம்.. நினைக்கும் போதே நாவில் நீர் ஊறுகிறதே. சுவையான சர்க்கரைப் பொங்கல் செய்து ருசிக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி/சோனாமசூரி அரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
ஏலக்காய் – 8
வெல்லம் – 1 கப்
முந்திரி – 10
உலர்ந்த திராட்சை – 10
நெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

அரிசியையும், பருப்பையும் தனித்தனியே தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். (ஊறிய பருப்பு விரைவில் வெந்துவிடும்.)
அரிசியையும், பருப்பையும் நன்றாகக் கழுவி சுத்தம் செய்யவும். தண்ணீர் இல்லாமல் வடித்து தனியே வைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். 2 கப் தண்ணீர் விட்டு பருப்பை அதில் வேக விடவும். வேண்டுமானால் மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
ஏலக்காயைத் தட்டி பொடியாக்கிக் கொள்ளவும். வெல்லத்தையும் தட்டி பொடியாக்கிக் கொள்ளவும்.
பருப்பு நன்றாக வெந்த பின்னறே அரிசியை அதனுடன் சேர்த்து வேக விடவும். அரிசி வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். அரிசியை நன்கு குலைய வேகவிட வேண்டும். அரிசி நன்கு வெந்துவிட்டதா என்பதைப் பார்க்க- ஓரிரண்டு அரிசியை எடுத்து விரல்களுக்கு இடையே வைத்து அழுத்தி நசுக்கிப் பார்க்கவும். அரிசி மிருதுவாக நசுங்கி விடும். இப்போது அரிசி நன்றாக வெந்து விட்டது என்று அர்த்தம்.
இனி ஏலக்காய்ப் பொடியையும், தட்டி வைத்த வெல்லத்தையும் அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கி விடவும்.
குறைந்த தணலில் வைத்து சிறிது நேரத்திற்கு ஒருமுறை அடிபிடிக்காமல் கரண்டி வைத்து கிளறிவிட்டுக் கொண்டே வரவும்.
வெல்லம் சேர்த்த பின் பொங்கல் இளகி மீண்டும் சிறிது நேரத்திற்கெல்லாம் இறுக ஆரம்பிக்கும்.
தனியே ஒரு கடாயில் நெய் விட்டுச் சூடாக்கவும். அதில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.
பொங்கல் நன்றாக இறுகி வரும் நிலையில் நெய்,வறுத்த முந்திரி,திராட்சையை அதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.