Author Topic: ~ சிக்கன் புரியாணி ~  (Read 344 times)

Offline MysteRy

~ சிக்கன் புரியாணி ~
« on: April 14, 2015, 11:03:34 PM »
சிக்கன் புரியாணி



தேவையான பொருட்கள்:

பக் ப்க் - 1 கிலோ
பசுமதி அரிசி - 1 கிலோ
வெங்காயம் - 2
தயிர் - 1 கப்
இஞ்சி+உள்ளி(வெள்ளைபூண்டு)) விழுது - 1 தே.க
மஞ்சள் தூள் - 1 தே.க
மிளகாய் தூள் - 1 மே.க
கஸு நட்ஸ் - 15
தேங்காய் பால் - 1 கப்
தேங்காய் தூள் - 1 மே.க
சின்ன சீரகம் -- 1 தே.க
ஏலக்காய் - 3
கராம்பு - கொஞ்சம்
கராம் மசாலா தூள் - 1 தே.க
பே இலைகள் - 5 (அது பேய் அல்ல)
மல்லி தளை - 1 கப்
எண்ணெய்/ வெண்ணெய் (யாரையும் குறிப்பிடவில்லை)
உப்பு தேவைக்கேற்ப(வெட்கம், ரோசம் குறைந்தவர்கள், அதிகமாக சேர்க்கலாம், தப்பில்லை)

செய்முறை:

* இறைச்சியை சுத்தம் செய்து, தயிர், உப்பு, தூள்கள் போட்டு கலக்கி 1 மணித்தியாலத்திற்கு ஊற வைக்கவும்.

1. வெங்காயங்களை சுத்தமாக்கி, நீள வாக்கில் வெட்டி எடுக்கவும்.

2. எரியும் அடுப்பில், ஒரு சட்டியை வைத்து, எண்ணெய் ஊற்றி சிறிது சூடாக்கவும்.

3. அதனும் மேற்கூறிய அனைத்து ஸ்பைஸயும் போடலாம். (மல்லிதூள், கராம்பு, ஏலக்க்காய், பே இலை). 2 நிமிடங்களுக்கு நன்றாக கிளறவும். (சட்டி கந்தலாகும் வாய்ப்புகள் அதிகம்)

4. பின்னர் அதனுள் 1 வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

5. அதனுள் ஏற்கனவே நாம் 1மணித்தியாலம் ஊற வைத்த இறைச்சியை போட்டு 20 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

6.இப்பொழுது அரிசியை எடுட்த்து அரைப்பதம் வேகும் வரை உப்பு சேர்த்து அவிக்கவும். (ரைஸ்குக்கரில் போட்டால் இலகு)

7. சிறிதளவு நெய்யிலோ/ எண்ணெயிலோ அடுத்த வெங்காயத்தை பொன்னிறமாகக பொறித்தெடுக்கவும். அதே போல கஸு நட்சையும் பொறிக்கவும்.

8. இப்பொழுது 20 நிமிடம் போய் கறி என்று சொல்ல கூடய அளவில் ஒரு உணவு சட்டியில் இருக்க வேண்டும். அதற்கும் தேங்காய் பால் மாவையும், கராம் மசாலாவையும் போட்டு கலக்கி, 2 நிமிடம் கொதிக்கவிட்டு சட்டியை அடுப்பில் இருந்து இறக்கவும்.

* ஒவனை போட்டு 180 ல விட்டுவிடுங்க.அது பாட்டுக்கு கொஞ்ச நேரம் இருக்கட்டும்.

9. ஒரு தட்டையான பாத்திரத்தில் (ஒவனில் வைக்க கூடிய) பாதி சாதத்தை கொட்டி பரப்பவும்.

10. அதன் மேல் கறியில் பாதி, பின்னர் சாதம், பின்னர் கறி & இறுதியாக சாதத்தை கொட்டி பரப்பவும்.

11. அதன் மேல் பொறித்த வெங்காயம், கஸு நட்ஸ், மல்லி இலையை சேர்த்து, தேங்காய் பாலை ஊற்றவும்.

12. ஏற்கனவே போட்ட ஒவனில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

13.இப்பொழுது நன்றாக கலக்கி அவித்த முட்டையுடன் பரிமாறாலாம். (அல்லது நீங்களே சாப்பிடலாம்.அது உங்க இஸ்டம்)