Author Topic: வண்ணத்துப் பூச்சி  (Read 879 times)

Offline Global Angel

வண்ணத்துப் பூச்சி
« on: December 21, 2011, 05:38:49 PM »
வண்ணத்துப் பூச்சி
 


வண்ணத்துப் பூச்சி
தட்டான்
பொன் வண்டு
எதுவும் பார்த்ததில்லை
என் குழந்தை
கொசுவைத் தவிர.


திருடன் போலிஸ்
அம்மா அப்பா
கண்ணா மூச்சு

 
எதுவும் விளையாடத் தெரியாத
என் குழந்தை
கம்ப்யூட்டரில்
கார் ரேஸிங்கில். . .



சுடும் மணல் நதி
மதிய நேரப்பாறை
எதிலும் பாதம் பட்டு
சூடுபடாத என் குழந்தை
 
கட்ஷுக்குள்
வெந்து போனது



முருங்கை மரம் ஏறி விழுந்து
கை ஒடிந்தவன்
மறுநாள்
மாவுக் கட்டுடன் பள்ளிக்கூடத்தில்


பாத் ரூமில்
வழுக்கி விழுந்த
என் குழந்தை
பெட்ரெஸ்டில் பத்து நாள்

நகரத்தில்
எல்லா வசதியுடன்
வாழ்கிறது என் குழந்தை
வாழ்க்கையைத் தவிர. . .


pdithu vethanaai patta kavithai
                    

Offline RemO

Re: வண்ணத்துப் பூச்சி
« Reply #1 on: December 21, 2011, 06:26:09 PM »
உண்மை தான் ஏஞ்சல் வருந்த வேண்டிய உண்மை
பெற்றோர்கள் குழந்தைகளை குழந்தைகளாக பார்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஒரு பொருளாக பார்கிறார்கள், அதுவும் நகரம் குழந்தைகளின் நரகம்