Author Topic: ~ டிப்ஸ்.. டிப்ஸ்..! ~  (Read 570 times)

Offline MysteRy

~ டிப்ஸ்.. டிப்ஸ்..! ~
« on: April 11, 2015, 10:10:03 PM »
டிப்ஸ்.. டிப்ஸ்..!



தேங்காய் மூடியிலிருந்து துண்டுகளை எடுக்க சிரமப்படுகிறீர்களா? முதலில் தேங்காய் மூடியின் உள்ளே, கத்தியால் நீளமாக அழுந்த கீறி விடுங்கள். பிறகு எடுத்தால் துண்டு கள் ஈஸியாக வந்துவிடும்.

– உஷா சுரேஷ், சென்னை-37

கறிவேப்பிலை, புதினா இலைகளை உருவியதும், அதன் காம்புகளை தூக்கியெறியாதீர்கள். அவற்றை நன்றாக வெயிலில் காய வைத்து, வறுத்த உளுத்தம்பருப்போடு சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். ரசம் மற்றும் காய்கறிகளில் இந்தப் பொடியைத் தூவிவிட்டால் சுவையும், மணமும் ஊரைக் கூட்டும்.

– பார்வதி, சென்னை-33

நோட்டில் கோலம் போட்டு பழகும்போது கறுப்பு நிற ஸ்கெட்ச் (அ) மைக்ரோ பேனாவால் புள்ளி வைத்துவிடுங்கள். இதன்மேல் பென்சிலால் கோலத்தைப் போடுங்கள். தவறாக வரைந்துவிட்டாலும் ரப்பரால் அழித்து திரும்பவும் வரையலாம். பேப்பரும் வீணாகாது.

– ஆர்.கற்பகலெட்சுமி, சென்னை-88

காய்கறியின் கலர் மாறாமல் புலவு செய்யலாமே. அரிசியை உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கறிகாய், மசாலா வகைகளைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதில் உதிர்த்த சாதத்தைக் கலந்து, குக்கரில் வெயிட் போடாமல் வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்தால் அருமையான புலவு ரெடி!

– திலகவதி அறிஞன், நாமக்கல்-1

எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, சீயக்காயைத் தண்ணீரில் கரைத்து, சில சொட்டுக்கள் ஷாம்புவை சேர்த்து அலசினால் நன்றாக நுரையும் வரும்.. கூந்தலும் வாசம் வீசும்.

– பா.நந்தினி, கரூர்

ஜூஸ் செய்ய ஒரு சூப்பர் ஐடியா. தர்பூசணி ஜூஸ் தயாரிக்கும்போது, ஒரு மெட்டல் வடிகட்டியில் பழத் துண்டுகளைப் போட்டு, அதன் மேல் ஒரு கனமான பாத்திரத்தால் அழுத்துங்கள். ஜூஸ் நொடியில் ரெடி. இதே போல, முறுக்கு பிழியும் அச்சிலும் சின்ன துளையுள்ள தட்டைப் பொருத்தி, அதனுள் மென்மையான பழங்களைப் போட்டு, மேல் அச்சினால் லேசாக அழுத்திக்கொண்டே வந்தால் ஜூஸ் கீழே இறங்கி விடும்.

– ம.ஜனனி, தேனி

ரவை, சர்க்கரையில் எறும்பு வந்தால் எரிச்சலைதான் ஏற்படுத்தும். எறும்பு வந்த பொருட்களை, ஒரு பெரிய தட்டில் கொட்டி, அதன் நடுவில் காகிதத்தில் சுற்றிய கற்பூரத்தை வையுங்கள். ‘எங்கே போச்சு எறும்பு?’ என்பீர்கள்.

– வீ.கஸ்தூரி, திருவெண்ணெய் நல்லூர்

இட்லி, தோசை, சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக வெல்லப்பாகில் தேன் (அ) பேரீச்சம்பழ ‘சிரப்’பை கலந்து கொடுங்கள். இரும்புச்சத்து சேருவதுடன் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.