Author Topic: ~ செட்டிநாடு துண்டு மீன் குழம்பு ~  (Read 433 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226929
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
செட்டிநாடு துண்டு மீன் குழம்பு



துண்டு மீன்- 1/2கிலோ
மஞ்சள் தூள்- 1டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய்- தேவையான அளவு
பூண்டு -5பல்
வெங்காயம்-3
சோம்பு 1டீஸ்பூன்
சீரகம் 1டீஸ்பூன்,
வெந்தயம்1டீ ஸ்பூன்
கறிவேப்பிலை
சீரகப் பொடி
தக்காளி -2
மிளகாய் தூள்
சாம்பார் பொடி
புளி எலுமிசை அளவு

எப்படி செய்வது?

முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதன் பின் அதில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து, 8 அல்லது 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து, அதில் மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, புளிச்சாறு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும். மீனானது நன்கு வெந்ததும், கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு மீன் குழம்பு ரெடி.