பிரியாணி ஸ்பெஷல்!

விசேஷ காலத்துக்கு ஏற்ற வெஜ் மற்றும் நான்வெஜ் ரெசிப்பிக்கள் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.
பிரியாணியின் மணத்துக்குக் காரணமான கரம் மசாலாத்தூளை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பதையும் இங்கே கற்றுக் கொள்ளுங்கள்.
கரம் மசாலாத்தூள்
கரம் மசாலாத்தூள் செய்ய:
பட்டை - 25 கிராம் கிராம்பு - 10 கிராம் ஏலக்காய் - 15 கிராம் மிளகு - 5 கிராம் ஜாதிக்காய் - ஒரு சிறிதளவு கறுப்பு ஏலக்காய் - 5 கிராம் ஸ்டார் அனைஸ் - 5 கிராம் மல்லி (தனியா) - 5 கிராம் பிரியாணி இலை - 2 ஜாதிப்பத்ரி - 5 கிராம் மராத்தி மொக்கு - 5 கிராம் சோம்பு - 5 கிராம் எல்லாவற்றையும் வெறும் வாணலியில் இரண்டு நிமிடம் குறைந்த தீயில் வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். இவைதான் பல சமையல்களில் பயன்படுத்தப்படும் கரம் மசாலாத்தூள். இதனை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் பத்திரமாக சேமித்து வைத்துப் பயன்படுத்தவும்.