Author Topic: ~ பருப்பு வடை ~  (Read 334 times)

Offline MysteRy

~ பருப்பு வடை ~
« on: April 04, 2015, 09:53:38 PM »
பருப்பு வடை



தேவையான பொருட்கள்

வடைப் பருப்பு - 2 கப்,
பொடித்த இஞ்சி - சிறிது,
பச்சை மிளகாய் - சிறிது.
உலர்ந்த மிளகாய் - 6,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
பெருங்காயம் தேவைப்பட்டால்.
மல்லித்தூள் - சிறிது பொடித்தது,
லவங்கம் - 4.

எப்படிச் செய்வது?

வடைப் பருப்பு என்பது கடலை பருப்பு போல் உள்ள ஒரு பருப்பு. கோவை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. இப்போது சென்னையிலும் கிடைக்கிறது. இந்தப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து இத்துடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம், லவங்கம் சேர்த்து கெட்டியாக கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் மல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பிசைந்து வடையாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இந்த வடைப் பருப்பு வடை நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்...