Author Topic: ~ வழவழப்பு இல்லாத வெண்டைக்காய் பொரியல் ! ~  (Read 383 times)

Online MysteRy

வழவழப்பு இல்லாத வெண்டைக்காய் பொரியல் !

சமையல் குறிப்பு

வெண்டைக்காய் பொரியல் எனக்கு ரொம்ப காலம் ஒரு சவாலாகவே இருந்துவந்தது. வழவழப்பு இல்லாத பொரியல் என்பது கனவாகவும் ஏக்கமாகவும் இருந்தது.



வெண்டைக்காயைக் கழுவி, துணியால் துடைத்துச் சுத்தம் செய்து, வில்லைகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம், தேவையான அளவு பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, அதன் பின், நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு, வழவழப்புப் போகும் வரை வதக்கவும்.  பிறகு, லேசாகத் தண்ணீர் தெளித்து, கடாயை மூடிவைத்து, சில நிமிடங்கள் கழித்து இறக்கினால், பொரியல் தயார். தண்ணீர் தெளிக்காமல் அப்படியே வதக்கி இறக்கும் பழக்கமும் நடப்பில் உள்ளது. பத்தமடைப்பாட்டி ஒருத்தி சொன்னது, வதக்கிய பின் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் விட்டு மூடி சில நிமிடங்கள் வேகவைத்தால், பொரியல் க்ரிஸ்ப்பியாக இருக்கும் என்பது. அது உண்மையிலேயே வெற்றி தரும் குறிப்பு என்பதை அனுபவத்தில் காண்கிறேன்.