Author Topic: ~ வடைகறி ~  (Read 340 times)

Offline MysteRy

~ வடைகறி ~
« on: April 01, 2015, 09:46:15 PM »
வடைகறி



தேவையானவை: வடை - 10, வெங்காயம் - 2, தக்காளி - 1, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், சோம்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி... இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் வடைகளைக் கிள்ளி போடவும். சிறிது நேரம் கொதிக்கவிட்டு... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.