Author Topic: ~ காளான் - பட்டர் மசாலா ~  (Read 338 times)

Offline MysteRy

~ காளான் - பட்டர் மசாலா ~
« on: April 01, 2015, 09:11:37 PM »
காளான் - பட்டர் மசாலா



காளான் - 75 கிராம்,
வெங்காயம் - 100 கிராம்,
பச்சை மிளகாய் - 4,
இஞ்சி-பூண்டு விழுது - 10 கிராம்,
தக்காளி வேக வைத்து அரைத்த விழுது - 100 மி.லி.,
கரம் மசாலா - 1 கிராம்,
மல்லித் தூள் - 3 கிராம்,
வெந்தயத் தூள் - 5 கிராம்,
மஞ்சள் தூள் - 1 கிராம்,
எண்ணெய் - 25 மி.லி.,
உப்பு - தேவையான அளவு,
முந்திரி விழுது - 10 கிராம்,
பால் - 20 மி.லி.,
வெண்ணெய் - 10 கிராம்,
கொத்தமல்லி இலை - சிறிதளவு.

எப்படிச் செய்வது?

வெண்ணெயை சூடாக்கி, அதில் காளானை வதக்கி தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கி அத்துடன் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்க்கவும். பச்சை மிளகாயை விழுதாக்கி, அதையும் சேர்த்து வதக்கவும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு தூளையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போடவும். இத்துடன் தக்காளிச் சாறை சேர்த்து அது கெட்டியாகும் வரை அப்படியே வைத்திருக்கவும். பிறகு இத்துடன் முந்திரி விழுதைப் போட்டு, பிறகு பாலைச் சேர்க்கவும். பிறகு வெண்ணெய் சேர்த்த காளானை இதில் போடவும். அதன்மீது கொத்தமல்லி இலைகளைத் தூவவும். சூடாகப் பரிமாறவும்.