Author Topic: ~ சமையல்...டிப்ஸ்... ~  (Read 765 times)

Online MysteRy

~ சமையல்...டிப்ஸ்... ~
« on: March 27, 2015, 02:17:22 PM »


ஃப்ரிட்ஜில் வைத்த பிரெட், பன் போன்றவை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அவற்றை 10 முதல் 15 விநாடிகள் ’மைக்ரோவேவ் அவன்'ல் வைத்து எடுத்தால் மீண்டும் ஃபிரெஷ்ஷாகிவிடும்.

Online MysteRy

Re: ~ சமையல்...டிப்ஸ்... ~
« Reply #1 on: March 27, 2015, 02:18:12 PM »


வெண்டைக்காய், பீன்ஸ் போன்ற காய்கள் முற்றலாக இருந்தால் தூக்கி எறிய வேண்டாம். அவற்றைத் துண்டு களாக்கி தண்ணீரில் போட்டு கொதிக்கவிடுங்கள். பிறகு வடிகட்டி, உப்பு, மிளகு, சீரகப் பொடி சேர்த்து சூப்பாக அருந்தலாம். அல்லது சாம்பார், கிரேவி போன்ற திரவ உணவுகளில் சேர்க்கலாம். இதனால் சத்துக்கள் வீணாகாமல் இருக்கும்.

Online MysteRy

Re: ~ சமையல்...டிப்ஸ்... ~
« Reply #2 on: March 27, 2015, 02:19:01 PM »


சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை செய்து இறக்கியதும், அதில் அரை டம்ளர் தேங்காய்ப்பால் ஊற்றிக் கலந்துவிட்டால் சுவை கூடும். ஆறினாலும் அதிகம் கெட்டியாகாது. நெய்யும் குறைவாகச் சேர்க்கலாம்

Online MysteRy

Re: ~ சமையல்...டிப்ஸ்... ~
« Reply #3 on: March 27, 2015, 02:19:44 PM »


தேன்குழல், முறுக்கு, தட்டை, சீடை போன்ற எண்ணெயில் பொரிக்கும் பலகாரங்கள் செய்யும்போது, முதலில் மாவை வெறும் வாணலியில் நன்கு சூடாக்கிக் கொள்ளுங்கள். இதனால் மாவில் பிசுபிசுப்பு இருக்காது. பட்சணங்கள் ருசியாகவும் மொறுமொறுவென்றும் இருக்கும்

Online MysteRy

Re: ~ சமையல்...டிப்ஸ்... ~
« Reply #4 on: March 27, 2015, 02:20:40 PM »


தக்காளி, வெங்காயம் போன்ற காய்களில் சட்னி செய்யும்போது சிறிது கறுப்பு எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் சட்னியின் மணமும் ருசியும் கூடுதலாக இருக்கும்.

Online MysteRy

Re: ~ சமையல்...டிப்ஸ்... ~
« Reply #5 on: March 27, 2015, 02:21:27 PM »


இட்லி மாவு, அடி மாவாக இருக்கும்போது இட்லி தோசை சரியாக வார்க்க முடியாது. இந்த மாவில் மிச்சம் இருக்கும் பொரியல், கூட்டு இவற்றைச் சேர்த்து, அத்துடன் ஒரு வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிப் போட்டு ஊத்தப்பமாகவோ, குழி அப்பமாகவோ சுட்டெடுத்தால் அருமையாக இருக்கும்.