Author Topic: 'விஷ உணவுகளில் இருந்து நம்மை எப்படித்தான் தற்காத்துக் கொள்வது?.....  (Read 414 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226860
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
'விஷ உணவுகளில் இருந்து நம்மை எப்படித்தான் தற்காத்துக் கொள்வது?' 'காய்கறிகள், பழங்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாதே. இதற்கு என்னதான் மாற்று?'



விஷத்தை முறிக்கலாம்!
'எல்லாம் சரி, ஆபீஸ் போற அவசரத்துல கிடைக்குறதை சமைச்சு, சாப்பிடும் நடுத்தர மக்கள் என்ன செய்வது. உடலுக்குக் கெடுதினு தெரியுது. ஆனா, இயற்கை அங்காடிகளைத் தேடி போக முடியலையே'' என அலுத்துக் கொள்பவர்களுக்கும் ஒரு தீர்வைச் சொல்கிறது திருவனந்தபுரத்தில் உள்ள கேரள விவசாய பல்கலைக்கழகம். சிறிது புளியை எடுத்துக் கரைத்து, அந்த தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலந்துகொள்ளுங்கள். அந்தக் கலவையில் காய்கறி, பழங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால் காய்கறி, பழங்களில் உள்ள ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் 95 சதவிகிதம் நீங்கி விடும். பீன்ஸ், பாவக்காய் போன்ற காய்கறிகளை இரண்டு முறை கழுவ வேண்டும்.



சீசன் பழங்களே சிறந்தது!
சொரசொரப்பான தோல்கொண்ட பழங்கள் அதிகம் ரசாயனப் பயன்பாடு அற்றதாக இருக்கும். ஆப்பிளை வாங்கியதும் சுடுநீரில் சிறிது நேரம் ஊறவைத்தோ அல்லது தோலை சீவிவிட்டோ உண்பதுதான் நல்லது. கூடுமானவரை பதப்படுத்தப்பட்ட பழங்களைப் பயன்படுத்தும் முன்பாக, வெதுவெதுப்பான நீரில் கழுவிய பிறகு, பயன்படுத்தினால் பெரும் பாதிப்புகளில் இருந்து தப்பலாம். இதையெல்லாம்விட, அதிக விலை கொடுத்து, பதப்படுத்தப்பட்ட பழங்களை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை மட்டுமே சாப்பிடப் பழகுவோம்.