Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கருவுற்ற தாய்மார்களுக்கு மருத்துவர் தரும் டிப்ஸ்! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ கருவுற்ற தாய்மார்களுக்கு மருத்துவர் தரும் டிப்ஸ்! ~ (Read 498 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226860
Total likes: 29028
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ கருவுற்ற தாய்மார்களுக்கு மருத்துவர் தரும் டிப்ஸ்! ~
«
on:
March 18, 2015, 04:23:53 PM »
கருவுற்ற தாய்மார்களுக்கு மருத்துவர் தரும் டிப்ஸ்!
மருத்துவர் தரும் டிப்ஸ்!
கர்ப்பமான முதல் 3 மாதத்துக்கு சாப்பாட்டில் அதிக புளி, வெல்லம் பூண்டு சேர்க்கக் கூடாது. இதெல்லாம் சூட்டைக் கிளப்பும். ஆனால் 4ம் மாதத்திலிருந்து சில நேரங்களில் பூண்டு ரசம் வைத்து சாப்பிட்டால் கர்ப்பிணிப் பெண்ணின் உடம்பில் வாயு தங்காது.
கர்ப்பிணிகள் 4ம் மாதத்திலிருந்து இடது பக்கமாகவே ஒருக்களித்துப் படுக்க வேண்டும். 5 நிமிஷத்திற்கு மேல் மல்லாந்து படுக்கக் கூடாது. ஒரே பக்கமாகப் படுக்கக் கடினமாயிருந்தால் வலது பக்கமாக சிநிது நேரம் படுக்கலாம் அடிக்கடி புரண்டு படுக்கக்கூடாது. கொடி சுற்றிக்கொள்ளும்.
மருத்துவரீதியாக இடது பக்கம் படுப்பதே சிறந்தது.
குழந்தைக்கு சீரான சுவாசமும் இரத்த ஓட்டமும் அப்போது தான் கிடைக்கும். 5 மாதமாகி விட்டால் குழந்தை வளைய வரும்போது வயிற்றில் இழுத்துப் பிடித்துக்கொண்டு வலி வரும். விளக்கெண்ணையைக் காய்ச்சி வெந்தயத்தைப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். அதைத் தொப்புளில் ஊற்றி, சுற்றித் தடவி, ஊறியதும் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இரவில் தடவி காலையிலும் குளிக்கலாம்.
மகப்பேறுற்ற மகளிர் அசல் குங்குமப்பூவின் தாள் 2 முதல் 5 வரை எடுத்துப் பகல் உணவுக்குப் பின் வெற்றிலையோடு சேர்த்து உண்ணலாம். அல்லது இரவில் பாலுடன் கலந்து பருகலாம். (குங்குமப்பூ உண்மையானவை என்பதற்கு அடையாளம்)
இந்தத்தாளின் ஒரு பகுதியைக் கிள்ளி 1 குவளை நீரில் போட்டால் உடனே நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறம் ஆகிவிடும். தாள் மெல்ல மெல்லக் கரைவதைக் காணலாம். மணம் கமழும் மினுமினுப்பாய் இருக்கும் கருவமைந்த 5 மாதம் கழித்தபின் தொடர்ந்து இதனை வாரம் 3 நாட்களாவது உண்டு வர இரட்டைப் பயன் பெறலாம்;
பிறக்கும் குழந்தை குங்குமச் சிவப்பில் ”கொழு கொழு” என்று இருக்கும். தாய்க்கும் குளிர்ச்சி காரணமாக வரக்கூடிய ஜன்னிக் காய்ச்சல் வராது. தற்காலத்தில் 'டெட்டனஸ்” ஊசிபோல அந்தக் காலத்தில் ”பிரசவ ஜன்னி” வராமல் காக்கும் மருந்தாகப் பயனாகியது.
குங்குமப்பூ எனில் மிகையன்று இதனால் பிரசவ வலிகளும் குறைந்து குழந்தை பிறந்தவுடன் கருப்பையில் தங்கும் அழுக்குகளையும் அகற்றும் தன்மை இதற்குண்டு. பசியின்மை. அஜீரணம் மலச்சிக்கல் கபக்கோளாறு ஆகியவற்றால் மகப்பேறுற்ற மகளிர் தொல்லை அடையாமல் காக்க உதவும் அரிய மூலிகை” குங்குமப் பூ”.
கருதரிப்பதற்கு முன்னதாகவே ஃபோலிக் ஆசிட் (Folic Acid) மாத்திரையை எடுத்துக் கொள்வதால், குழந்தைக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளைத் தவிர்க்க முடியும்.
கருவுற்ற ஆரம்பத்திலேயே ஹீமோகுளோபின், தைராய்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு போன்ற அடிப்படை டெஸ்ட்களை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.
கருவுற்ற தாய்மார்களுக்கு ரத்தசோகை ஏற்படுவது இயல்பு. இதனால், காய்கறிகள், கீரை மற்றும் பழ வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்திலிருந்தே இரும்பு, கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
கருவுற்ற காலத்தில் கட்டாயமாக மூன்று முறை ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும்.
கருவுற்ற ஆரம்ப காலத்தில் கரு சரியாக கர்ப்பப்பையில் உள்ளதா என தெரிந்துகொள்ள வேண்டும்.
18-20 வாரத்தில் முழுமையாக வளர்ந்த கரு, பிறவிக் குறைபாடு இல்லாமல் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
கருவுற்ற கடைசி மாதங்களில் கர்ப்ப காலத்திற்கு ஏற்ற வளர்ச்சி உள்ளதா என்றும், பனிக்குடம் நீர் சரியாக உள்ளதா என்றும் தெரிந்துகொள்ளும் ஸ்கேன் அவசியம் செய்துகொள்ள வேண்டும்.
கருவுற்ற காலங்களில் அமைதியான மனநிலையில் இருப்பது அவசியம். தினமும் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும்.
மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.
40 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி செய்தல் வேண்டும்.
கர்ப்பிணிகள் பயப்படாமல் இருக்க மேலும் பல டிப்ஸ்கள் இதோ...!
தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது குழந்தையின் வளர்ச்சியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். கருவுற்ற பெண்கள் பொதுவாக குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களிலும், ஜன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக்கூடாது. மழையிலோ மழைச்சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம்சூடான நீரில் குளித்து விட வேண்டும்.
எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரை பருகுவது நல்லது. அதிலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக சூடான நீரை குடிக்கக்கூடாது. குளிர்சாதன பெட்டியில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவு பொருட்களை தவிர்த்தால் ஜலதோஷம் வராது. ஜலதோஷம் வந்தால் அது கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். அதிக காரம், புளிப்பு போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்பது நல்லது.
குங்குமப்பூ
பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரும் கர்ப்பிணிக்கு சிறிதளவு குங்குமப்பூவுடன் சோம்பு நீரில் கரைத்து கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும். கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் வெற்றிலையுடன், சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ச்சிய பாலில் குங்குமப்பூவை போட்டு குடித்து வந்தாலோ பிறக்கும் குழந்தை சிவப்பாக இருக்கும்.
வாக்கிங் அவசியம்
கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல்நிலையை பலப்படுத்தும். கர்ப்பகாலத்தின் ஆரம்ப மாதங்களிலும், கடைசி மாதங்களிலும் களைப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும்போது தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. கர்ப்பிணிகள் தங்களால் முடிந்த வேலைகளை மட்டும் செய்யலாம். களைப்பை ஏற்படுத்தும் வேலைகளை செய்வது தவிர்ப்பது நல்லது.
கீரைகள், பழங்கள், தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களை தவிர்த்து மற்ற பழங்களை சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணிகள் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட வேண்டும். உணவு சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தல் போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது. அதிக சத்தம் போட்டு பேசக்கூடாது. இதனால் வயிற்றில் உள்ள கருவிற்கு அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
புரதம்: கர்ப்ப காலத்தில் புரதத்தின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே புரதம் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது முக்கியமாகும். மீன், இறைச்சி வகைகளுடன், கடலை, அவரை போன்றவை அதிக புரதச்சத்து கொண்டவையாகும்.
போலிக் அமிலம்: கருவுற்ற முதல் சில வாரங்களில் சிசுவின் நரம்பு மண்டலம் வளர்ச்சிபெறும் காலம். எனவே போலிக் அமிலம் அவசியமானது. பச்சை நிறமான காய்கறி வகைகள் போலிக் அமிலத்தை அதிகமாக கொண்டுள்ளன. அவற்றை நீராவியில் வைத்து சாப்பிடுதல் அல்லது பச்சையாகவே சாப்பிடுதல் சிறந்தது.
நார்ப்பொருள்: கர்ப்பிணிகளுக்கு சாதாரணமாகவே மலச்சிக்கல் இருக்கும். இதை தவிர்க்க நார்ப்பொருள் அடங்கிய உணவுகளை தினமும் உட்கொள்வது அவசியம். பழ வகைகள், காய்கறி வகைகளில் இவற்றை சாப்பிடலாம். தானிய வகை, நாட்டரிசி, விதை வகைகள், இலந்தம்பழம், திராட்சை போன்றவற்றிலும் நார்ச்சத்து உள்ளது.
நல்ல ஓய்வு: கர்ப்பமாக இருக்கும்போது நீண்ட நேர ஓய்வு அவசியமானது. அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நன்மையை விளைவிக்கும். கண்களின் மீது சூரிய வெளிச்சம் படாமல் இருக்க, கண்களுக்கு மாஸ்கை கூட அணியலாம்.
மெதுவாக விழியுங்கள்: காலையில் சீக்கிரம் எழும் பழக்கம் இருக்கலாம். ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது இந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டும். காலையில் எழுந்திருக்க உங்கள் உடலுக்கு போதிய நேரத்தை கொடுங்கள். மெதுவாக எழுந்திருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் போதுமான அளவில் நீரை பருக வேண்டும். நீர்ச்சத்து குறைந்தால் பாதிப்பு ஏற்படும் எனவே முடிந்த வரை தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைபிடித்தால் சுகமான பிரசவம் ஏற்படும்.
ரத்தசோகை - கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை
கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்கும் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரசவத்தின் போது பொதுவாக அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்த சோகை நோய் இருந்தால் ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும்.
தாய்க்கு ரத்தசோகை இருந்தால் குழந்தை குறை பிரசவத்திலும், குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. நோயாளி இரும்பு சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால் இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும்.
கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள்,சோயா பீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. வலி நிவாரணி, வீக்கத்தை குறைக்கும் மருந்துகளாலும், ரத்த சோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தை சரி செய்ய வேண்டும்.
இத்தகைய ரத்த சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைகீரை, அரைக்கீரை, ஆரைக்கிரை, புதினா, கொத்த மல்லி, கறிவேப்பலை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது.
இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும் மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுத்தங்களி, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கருவுற்ற தாய்மார்களுக்கு மருத்துவர் தரும் டிப்ஸ்! ~