Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ ஈஸியா ஜெயிக்கலாம்! எக்ஸாம் டிப்ஸ் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ ஈஸியா ஜெயிக்கலாம்! எக்ஸாம் டிப்ஸ் ~ (Read 714 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223141
Total likes: 27837
Total likes: 27837
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ ஈஸியா ஜெயிக்கலாம்! எக்ஸாம் டிப்ஸ் ~
«
on:
March 18, 2015, 04:21:26 PM »
ஈஸியா ஜெயிக்கலாம்!
எக்ஸாம் டிப்ஸ்
மார்ச் மாதம் பரீட்சைக் காய்ச்சல் தொற்றிக் கொள்ளும் மாதம். வீடுகளில் இரவில் நெடு நேரம் விளக்கெரியும், அம்மாக்கள் டீ போட, அதிகாலையில் குரூப் ஸ்டடி களைகட்டும். கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட, தொலைக்காட்சிப் பெட்டிகள் முடங்கிப்போகும். சீரியல் சத்தங்களுக்குப் பதிலாக செய்யுள்களும், ஃபார்முலாக்களும் மனப்பாடம் செய்யும் சத்தம்தான் கேட்கும். இவ்வளவு உழைப்பைக் கொடுத்தாலும், தன்னம்பிக்கையோடு தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் மிகவும் குறைவு. தேர்வு என்றாலே பயத்திலும் பதற்றத்திலுமே பாதி படித்ததை மறக்கும் மாணவர்கள்தான் அதிகம்.
'தெரிந்த கேள்விகள் வருமா, வராதா?’, 'நல்லா எழுதுவோமா? நிறைய மார்க் கிடைக்குமா? என்கிற யோசனைகளில் மாணவர்கள் பதற்றமாகவே இருப்பார்கள். பதற்றத்தில் நெஞ்சுப் படபடப்பு அதிகரித்து, உள்ளங்கை வியர்க்கும். சிலருக்கு உடல் முழுவதுமேகூட வியர்க்கும். இதை 'பர்ஃபார்மன்ஸ் ஆங்க்ஸைட்டி’ என்று சொல்வோம். ''தோ பாருப்பா! இது பப்ளிக் எக்ஸாம். சும்மா இல்ல, உன் வாழ்க்கையையே நிர்ணயிக்கப் போறது'' என்று சொல்லி சுற்றியிருப்பவர்கள் வேறு பில்டப்கொடுத்தே, மாணவர்களைப் பீதிக்கு உள்ளாக்கிவிடுவார்கள். அந்த பயத்திலேயே, அவர்கள் பர்ஃபார்மன்ஸ் குறைந்துவிடும்.
மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையல்ல!
முதலில் இந்த மாணவர்களும் பெற்றோர்களும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுத்தேர்வு என்பது ஒருவருடையடைய வாழ்க்கையில் முக்கியமானதுதான் என்றாலும், அது ஒன்று மட்டுமே அவருடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் விஷயம் இல்லை. எங்களுக்கு அழைக்கும் மாணவர்களின் பிரச்னைகள் மூன்று விதமானவை. சிலருக்கு எவ்வளவுதான் படித்தாலும் நினைவில் நிறுத்த முடியாத பிரச்னை, சிலருக்குப் படிக்கும் முறை தெரியாததால் பிரச்னை, இன்னும் சிலருக்கு நேர நிர்வாகம் இல்லாததுதான் பிரச்னை. 'நினைவு வச்சுக்கிறதுலதான் எனக்கு பிராப்ளம்', 'எப்படி அட்டெண்ட் பண்ணப் போறேன்னு தெரியல... பயமாயிருக்கு', 'பரீட்சையை நினைச்சாலே படபடப்பா இருக்கு' என்று மாணவர்களும், 'என் பையன்/பொண்ணு டென்த்/ப்ளஸ் டூ எக்ஸாம் எழுதப்போறாங்க. நாங்க அவங்களை எப்படி கைடு பண்ணனும்?' என்று பெற்றோர்களும், 'பப்ளிக் எழுதப்போற எங்க மாணவர்களுக்கு நாங்க எப்படி ஆலோசனை சொல்லணும்?' என்று ஆசிரியர்களும் கேட்கிறார்கள். மாணவர்களையும் பெற்றோர்களையும்விட ஆசிரியர்களிடம் பேசும்போது அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம்.
எப்படிப் படிப்பது?
ஒரு விஷயத்தைப் படிப்பதோடு மட்டுமில்லாமல், திரும்பத் திரும்ப நினைவுகூர்வது, அந்த விஷயத்தை மறக்காமல் இருக்க உதவும். இதை 'ஷார்ட் டெர்ம் மெமரி’, 'லாங் டெர்ம் மெமரி’ உதாரணம் சொல்லிப் புரியவைக்கிறோம். உதாரணத்துக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் சாப்பிட்ட உணவு நம் நினைவில் இருக்காது. ஆனால், நம்முடைய பிறந்த நாளை, தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட சொல்வோம். காரணம், அதைத் திரும்பத் திரும்ப எல்லா இடங்களிலும் சொல்வதாலும் ஆண்டுதோறும் அந்த நாளைக் கொண்டாடுவதாலும்தான். எனவே, படித்ததை மீண்டும் மீண்டும் 'ரீகால்’ செய்யும்போது, அது நன்கு மனதில் பதிந்து, மறக்காமல் இருக்கும். சிலருக்கு கதை சொல்வதன் மூலம், 'காக்னிட்டிவ் ரீஸ்ட்ரக்சரிங்’ முறையில் படபடப்பையும் பயத்தையும் போக்குகிறோம்.
ஒப்பீடு வேண்டாம்
ஒரு மாணவர், ''என் பக்கத்து வீட்டுப் பையன் பப்ளிக்ல அதிகம் மார்க் வாங்கியிருக்கான். அவனைவிடக் குறைவாக நான் வாங்கினால் அவமானமா இருக்கும். அதனால எக்ஸாம் எழுதுறதுக்கே தயக்கமா இருக்கு'' என்று சொன்னார். அவருக்கு, 'ஒப்பிடுதலின்’ விளைவுகளைப் புரிய வைத்தோம். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். கல்வியில் கொஞ்சம் பின்தங்கியிருக்கும் மாணவருக்கு வேறு ஏதேனும் திறமைகள் இருக்கலாம். அதற்காகத் தேர்வை எழுதாமல் விட்டால், எதிர்காலத்தில் அடுத்த கல்விநிலைக்குச் செல்லமுடியாமல் போய்விடும். மாணவர்கள் தங்களை இன்னொருவரோடு ஒப்பிடுவது மட்டுமல்ல, பெற்றோரும் பிள்ளைகளை பிறரோடு ஒப்பிட்டுப் பேசி தாழ்வு மனப்பான்மையை உருவாக்கக் கூடாது.
தூக்கம் அவசியம்
பரீட்சை நேரத்தில் மாணவர்கள் தூங்காமல் விழித்திருந்து படிப்பது மிகவும் தவறு. மூளைக்குச் சரியான ஓய்வு கொடுத்தால்தான், படித்ததை அது நினைவில் வைத்துக்கொள்ளும். பெற்றோர் பிள்ளைகளை அதிக நேரம் விழித்திருந்து படிக்க சொல்லக் கூடாது. ''தூங்குவதற்கு அனுமதியுங்கள். நல்ல சத்தான ஆரோக்கிய உணவுகளைக் கொடுங்கள். பிறருடன் ஒப்பிடாதீர்கள்'' என்பதைத்தான் பெற்றோருக்கு மீண்டும் மீண்டும் சொல்கிறோம்.
பதற்றம் தேவை
பிருந்தா ஜெயராமன்.
பரீட்சை வந்துவிட்டால் கொஞ்சம் அது குறித்த பதற்றமும் தேவைதான். பதற்றம் இல்லையெனில் அலட்சியம் வந்துவிடும். ஆனால், ஆரம்பம் முதலே அலட்சியமாக இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாகத் தேர்வுக்குத் தயாராகும் பரபரப்புத்தான் தேவையற்றது. ஒவ்வொரு பருவத்திலும் பள்ளியில் ’சுற்றுத் தேர்வுகள்’ வைக்கிறார்கள். கடைசியாகப் பொதுத் தேர்வு வரும்போது, ஆரம்பத்தில் படித்ததை மறந்துவிடுகிறார்கள். அதனால்தான் ’ஆங்க்ஸைட்டி’ வருகிறது.
இன்னொரு காரணம், பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. ’நாம மார்க் வாங்கலன்னா அம்மா, அப்பாவின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாமப் போயிடுமோ’ என்ற கவலையும் சேர்ந்து, மாணவர்களுக்குப் பயம், படபடப்பை அதிகரிக்கச் செய்துவிடுகிறது. பெற்றோர் மாணவர்களின் பதற்றத்தைக் குறைக்க வேண்டுமே தவிர, பதற்றத்தை உருவாக்கக் கூடாது. 'நீ நல்லா கடுமையா உழைச்சுப் படி. ஆனா, முடிவுகள் பத்திக் கவலைப்படாத. நீ பரீட்சையை நல்லா எழுதுறதுக்கு நாங்க எந்த விதத்தில் உதவணும்னு சொல்லு. கூட உக்காரணுமா, சொல்லித்தரணுமா... எது வேணாலும் செய்யத் தயார்' என்று சொல்லி, அவங்களை உற்சாகப்படுத்த வேண்டும். 'நீ என்னத்த பெரிசா படிச்சு, எழுதிக் கிழிச்சுடப் போறே?' என்று மட்டம்தட்டினால், அவர்களுக்குப் படபடப்பு அதிகமாகிவிடும்.
’மார்க் என்ன வேணா வரட்டும். நான் படிச்சதை, தெளிவா எழுதுவேன்’ என்கிற தன்னம்பிக்கையோடு மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் வாழ்க்கையை முற்றிலுமாகத் தீர்மானிக்காது.
தேர்வு கால உணவு
டாக்டர் எஸ்தர், 104 சேவை பிரிவு
தேர்வு சமயத்தில், உடல் நலம் குறித்து, 104-ல் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மருத்துவர்கள் நாங்கள் ஆலோசனை சொல்கிறோம். பலர், 'நினைவுத்திறன் அதிகரிக்க, உடல் பலத்துக்கு எல்லாம் என்ன மாத்திரை சாப்பிடலாம்?’ என்று கேட்பார்கள். நாங்கள் ஒருபோதும் மாத்திரைகளைப் பரிந்துரைப்பது இல்லை. மூளையின் நல்ல செயல்பாட்டுக்குரிய உணவுகளைச் சொல்கிறோம். முக்கியமாக, பரீட்சைக்கு முன்பு, பாதம், முந்திரி போன்ற நட்ஸ் சாப்பிடலாம். பழ வகைகளுடன், சர்க்கரை சேர்க்கப்பட்ட ஜூஸ் தேர்வு சமயத்தில் எடுக்கலாம். ஆரோக்கியமான, சமச்சீரான உணவு அவசியம்.
மணிக்கணக்கில் தொடர்ந்து படித்தால், மூளை சோர்வடையும். 2 மணி நேரம் படித்த பிறகு, கட்டாயம் ஒரு 'பிரேக்’ கொடுக்கவேண்டும். அந்த சில நிமிடங்களில், ஒரு வாக் போகலாம். அல்லது பிடித்த பாடல் கேட்கலாம். ஏதாவது காமெடி சேனல் பார்க்கலாம். 30 முதல் 40 நிமிடங்கள் வரை பிரேக் எடுக்கலாம்.
மிக முக்கியமானது, தூக்கம். சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதியிலிருந்து வரும் 104-க்கு வரும் அழைப்புகளில், அவர்கள் தினமும் இரவு 11 மணிக்கு மேல் படுத்து காலை 4 மணிக்கு எழுவதாகச் சொல்கிறார்கள். குறைவான தூக்கம் ஆபத்தானது. ஆறு மணி நேரம் முதல் எட்டு மணிநேர ஆழ்ந்த தூக்கம் அவசியம் தேவை.
பால் பொருட்கள், ஜங்க் உணவு வகைகள், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற உனவு வகைகளைத் தேர்வு சமயத்தில் தவிர்க்க வேண்டும்.
நிறைய தண்ணீர், அதிகமான பழம், காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெற்றோர், குழந்தைகளுக்கு அசைவ உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளைத் தரவேண்டும்.
தேர்வு குறித்த பயமோ, பதற்றமோ... எதுவாக இருந்தாலும், 104 என்ற எண்ணுக்கு போன் செய்தால் போதும். மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருத்துவ உளவியல் நிபுணர்கள் மாணவர்களுடன் பேசி, அவர்களின் பதற்றத்தைப் போக்கி, தேர்வை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை வழங்குகிறார்கள். இந்தச் சேவையைத் தொடங்கிய ஒரே மாதத்தில் ஆயிரக்கணக்கில் அழைப்புகளாம். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என எல்லாத் தரப்பினரும் பரீட்சையை எதிர்கொள்வது குறித்து இந்த எண்ணுக்கு அழைத்துக் கேட்கிறார்கள்.
''கடந்த பிப்ரவரி 9-ம் தேதி இந்தச் சேவை தொடங்கப்பட்டது. அதிலிருந்து தினசரி 700 கால்ஸ் அட்டெண்ட் பண்றோம். 24 மணி நேரமும் இயங்கும் இந்தச் சேவையில், மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறதால, மத்த அழைப்பாளர்கள் கொஞ்சம் காத்திருக்கிற அளவுக்கு தொடர்ந்து கால்ஸ் வருது'' என்கிறார் 104 சேவையின் டீம் லீடர் ராஜாராம்.
எச்.கிருஷ்ணமூர்த்தி, திருச்சி
'மொபைல் போனை தூங்கும்போது, தலையணைக்குக் கீழும், அருகில் வைத்தும் உறங்கக் கூடாது என்கிறார்கள். அதேபோல, மேல்பாக்கெட்டிலும் கீழ் பாக்கெட்டிலும் மொபைல் போனைவைத்தால், உடல் நல பிரச்னைகளான இதய பாதிப்பு, ஆண்மைக் குறைபாடு ஏற்படும் என்கிறார்கள். என்னால் மொபைல் போன் இல்லாமல் இருக்க முடியாது. பாதிப்புகள் இல்லாமல் எப்படி மொபைல் போனைப் பயன்படுத்துவது? பாக்கெட்டில் வைக்கக் கூடாது என்றால் மொபைல் போனை வேறு எங்குதான் வைப்பது?'
டாக்டர் சூர்ய குமார், காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர், கம்பம்
'மொபைல் போன் பயன்படுத்தாதவர்களே இன்று இல்லை. முன்பு இருந்த பழைய மாடல்களில், அதிக கதிர்வீச்சுகளை வெளியிடும் தன்மை இருந்தது. தற்போது, கதிர்வீச்சுகள் மிகக் குறைவான அளவே வெளியிடும் மொபைல் போன்கள் மார்கெட்டில் வந்துவிட்டன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதே சிறந்தது. குறைந்த விலைகொண்ட மொபைல் மற்றும் சூடாகும் மொபைலில் அதிகக் கதிர்வீச்சுகள் வெளியாகும். விலை குறைவான பழைய மாடல் மொபைல்களைத் தவிர்க்கலாம். ஏனெனில் மூளை, காது, நரம்பு, கண்கள், ஆண்மைக் குறைவு போன்ற பிரச்னைகள் வரக்கூடும். தொடர்ந்து போன் பேசும் போது, காது கேளாமை பிரச்னையும் வரலாம்.
தூங்கும் முன், மொபைலை அருகில் உள்ள டேபிள் அல்லது ஷெல்ஃபில் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. அதுபோல மொபைலை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த வேண்டுமெனில், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேச வேண்டாம். முடிந்த அளவுக்கு, இமெயில், லேண்ட் லைன் பயன்படுத்துங்கள். இயர் போன்வைத்துப் பேசுங்கள்.
தொடர்ந்து பேச வேண்டுமெனில், 20 நிமிடங்களுக்குப் பிறகு சிறிது இடைவெளிவிட்டுப் பேசுங்கள். தற்போது அழகழகான மொபைல் பவுச்கள் கிடைக்கின்றன. எனவே, பாக்கெட்டில் மொபைலை வைக்காமல் பவுச்சில் வைத்துப் பயன்படுத்துவது சிறந்தது.'
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ ஈஸியா ஜெயிக்கலாம்! எக்ஸாம் டிப்ஸ் ~