Author Topic: ~ கார அடை தோசை ~  (Read 459 times)

Online MysteRy

~ கார அடை தோசை ~
« on: March 18, 2015, 07:21:54 AM »
கார அடை தோசை



தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப், பஜ்ஜி - போண்டா மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கோதுமை மாவு, பஜ்ஜி - போண்டா மாவு இரண்டையும் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு, கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு... வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை தாளித்து கரைத்த மாவுடன் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசையாக வார்த்து, எண்ணெய் விட்டு, திருப்பி போட்டு எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.