Author Topic: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~  (Read 2860 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #15 on: March 01, 2015, 02:12:58 PM »
லிச்சி ஃப்ரூட் பாசந்தி



தேவையானவை:
 லிச்சி பழம்  ஒரு கப் (தோல் உரித்து, கொட்டை நீக்கியது), பால்  ஒரு லிட்டர், சர்க்கரை  கால் கப், குங்குமப்பூ  சிறிதளவு, நெய்  ஒரு டீஸ்பூன், பாதாம் - 6 (சீவவும்).

செய்முறை:
கெட்டியான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி, கால் லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்சவும். அத்துடன் லிச்சி பழத்தை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு... பிறகு, சர்க்கரையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சீவிய பாதாம் பருப்பு, குங்குமப்பூ தூவி, ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துச் சாப்பிடவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #16 on: March 01, 2015, 02:14:29 PM »
பப்பாளி கேசரி



தேவையானவை:
ரவை  ஒன்றரை கப், நறுக்கிய பப்பாளித் துண்டுகள்  ஒரு கப், காய்ச்சி ஆறவைத்த பால்  ஒரு கப், சர்க்கரை - 2 கப், முந்திரிப் பருப்பு, உலர்திராட்சை (சேர்த்து) -  2 டேபிள்ஸ்பூன், நெய் -  3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள்  ஒரு சிட்டிகை.

செய்முறை:
பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அதனுடன் பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். வெறும் வாணலியில் ரவையை வறுத்து தனியாக வைக்கவும். அதே வாணலியில் சிறிதளவு நெய் விட்டு முந்திரிப் பருப்பு, உலர்திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும். பின்னர் அதே வாணலியில் இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் ரவை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி வேகவிடவும். பின்னர் அரைத்த பப்பாளி விழுது, சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #17 on: March 01, 2015, 02:16:06 PM »
ஆரஞ்சு கத்லி



தேவையானவை:
ஆரஞ்சு சுளைகள் -  2 கப், முந்திரி - 200 கிராம், சர்க்கரை - 100 கிராம், நெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
முந்திரியை மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஆரஞ்சை ஜூஸாக்கி  இதனுடன் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் ஏற்றி, சர்க்கரை, அரைத்த முந்திரி  ஆரஞ்சு விழுது சேர்த்துக் கிளறி, தீயை மிதமாக வைத்து, நெய் விட்டு நன்றாகக் கிளறவும். கலவை கெட்டியானதும் தட்டில் போட்டு பரப்பி, ஆறவிட்டு துண்டுகள் போடவும்.
விருப்பப்பட்டால் ஆரஞ்சு ஃபுட் கலர் ஒரு சிட்டிகை சேர்த்துக்கொள்ளலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #18 on: March 01, 2015, 02:17:42 PM »
தர்பூசணி பக்கோடா



தேவையானவை:
தர்பூசணி (வெண்மையான அடிபாகத்தை மட்டும் எடுத்து துருவிக்கொள்ளவும்)  அரை கப், சோள மாவு - 25 கிராம், அரிசி மாவு - 25 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம்  ஒரு கப், இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், புதினா இலை - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
துருவிய தர்பூசணியுடன் சோள மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், புதினா, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்). கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #19 on: March 01, 2015, 02:19:20 PM »
உருளைக்கிழங்கு  மாதுளம்பழ குல்சா



தேவையானவை:
வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு  அரை கப், கோதுமை மாவு - 2 கப், மாதுளை முத்துக்கள்  அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம்  அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள்  தலா அரை டீஸ்பூன், நெய் -  2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:
அகலமான பாத்திரத் தில் கோதுமை மாவு, எண்ணெய், சிறிது உப்பு, சிறிது சீரகத்தூள், சிறிது கரம்மசாலாத்தூள், வேகவைத்த உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு மாவை இளக்க மாக பிசைந்துகொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மாதுளை முத்துக்கள், மீதமுள்ள சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கலந்துகொள்ளவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, குழி செய்து அதனுள் சிறிதளவு மாதுளை கலவையை வைத்து வட்டமாக தேய்க்கவும். இதுதான் குல்சா. தவாவில் சிறிது நெய்விட்டு குல்சாவை சுட்டு எடுத்துப் பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #20 on: March 01, 2015, 02:21:05 PM »
ஃப்ரைடு நூடுல்ஸ் வித் சாஸ்



தேவையானவை:
பிளெய்ன் நூடுல்ஸ்  ஒரு கப், நறுக்கிய பழம்  ஒரு கப் (ஆப்பிள், கிவி, பைனாப்பிள், மாம்பழம், திராட்சை), பூண்டு - 4 பல் (நறுக்கியது), வெண்ணெய் - 2 டீஸ்பூன், மைதா  ஒரு டீஸ்பூன், சீஸ்  ஒரு க்யூப், பால்  அரை லிட்டர், எண்ணெய், உப்பு  சிறிதளவு.

செய்முறை:
நூடுல்ஸை வேகவிட்டு, நீரை வடித்து நன்கு ஆறவிட்டு, எண்ணெ யில் பொரித்தெடுக்கவும். அடுப்பில் ஒரு ’பேன்’ பாத்திரத்தை வைத்து வெண்ணெய் சேர்த்து, உருகியதும் பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் மைதாவை சேர்த்து வாசம் போகும் வரை வதக்கி, பாலை ஊற்றிக் கிளறி, சிறிது உப்பு சேர்த்து சாஸ் பதத்துக்கு வந்தவுடன் பழங்களைச் சேர்த்துக் கலந்து, துருவிய சீஸ் தூவி இறக்கவும். இதனை ஃப்ரைடு நூடுல்ஸ் உடன் சேர்த்து சாப்பிடவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #21 on: March 01, 2015, 02:22:34 PM »
பனானா கேக்



தேவையானவை:
வாழைப்பழ கூழ்  அரை கிலோ, சர்க்கரை  முக்கால் கிலோ, சிட்ரிக் ஆசிட்  கால் டீஸ்பூன், உப்பு  அரை டீஸ்பூன், வெண்ணெய் - 125 கிராம், வெனிலா எசன்ஸ்  சில துளிகள்.

செய்முறை:
வாழைப்பழ கூழ், சர்க்கரை, சிட்ரிக் ஆசிட், வெண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கனமான வாணலியில் கலந்துகொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி சீராக கிளறிவிடவும். பாத்திரத்தின் ஓரங் களை விட்டு கூழானது நடுவில் உருண்டை போல் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். கலர் எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இதை வெண் ணெய் தடவிய தட்டில் போட்டு, ஆறவிடவும். பிறகு, துண்டுகளாக வெட்டி பட்டர் பேப்பரில் சுற்றி வைத்து பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #22 on: March 01, 2015, 02:24:11 PM »
ஆரஞ்சு குழம்பு



தேவையானவை:
ஆரஞ்சு பழத் துண்டுகள்  ஒரு கப் (தோல், கொட்டைகளை நீக்கவும்), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்  தலா சிட்டிகை, கடுகு  அரை டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, புளி  எலுமிச்சையளவு, எண்ணெய், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை தாளிக்கவும். பின்னர் ஆரஞ்சுப்பழத்தை சேர்த்து நன்றாக வதக்கி... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை நன்றாக கெட்டியானதும் இறக்கவும்.
சாதம் மற்றும் பொங்கலுக்கு ஏற்ற குழம்பு இது.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #23 on: March 01, 2015, 02:25:50 PM »
வாழைப்பழம்  குல்கந்த் ஐஸ்கிரீம்



தேவையானவை:
ஏலக்கி வாழைப்பழம்  ஒரு கப் (வட்ட வட்ட துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்), குல்கந்த் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)  அரை கப், முந்திரி, உலர்திராட்சை (சேர்த்து) - 4 டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம்  ஒரு கப், வெண்ணெய் - 4 டீஸ்பூன், வாழை இலை துண்டுகள்  சிறிதளவு

செய்முறை:
ஒரு பெரிய கப்பில் வாழைப்பழத் துண்டுகளுடன் குல்கந்த், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து கலக்கவும். வாழை இலை துண்டுகளை சுத்தம் செய்து, அவற்றின் மீது சிறிது வெண்ணெய் தடவி, வாழைப்பழக் கலவையை இரண்டு இரண்டு ஸ்பூன் வைத்து, ஐஸ்க்ரீம் சிறிது வைத்து கலந்து சாப்பிடவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #24 on: March 01, 2015, 02:27:31 PM »
பிரெட் ஃப்ரூட் ரோல்



தேவையானவை:
பிரெட் - 5 ஸ்லைஸ், பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 2 டீஸ்பூன், நறுக்கிய ஆரஞ்சு, கிவி,  பப்பாளி, வாழைப்பழம் மற்றும் திராட்சைப்பழம்  தலா - 2 டீஸ் பூன், முந்திரி, உலர் திராட்சை (சேர்த்து) - 4 டீஸ்பூன், மில்க்மெய்ட் - 5 டீஸ்பூன், தேன்  சிறிதளவு, சில்வர் பேப்பர் (ஃபாயில் பேப்பர்)  தேவைக்கேற்ப.

செய்முறை:
முந்திரி, உலர் திராட்சை மற்றும் எல்லா பழங்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பிரெட் துண்டுகளை ஓரம் வெட்டிக்கொள்ளவும். அதன்மீது மில்க்மெய்ட் ஒரு டீஸ்பூன் தடவி... கொஞ்சம் பழக் கலவை, சிறிது தேன் சேர்த்து பரப்பவும். பிரெட்டை சில்வர் பேப்பர்  மீது வைத்து இறுக்கமாக ரோல் செய்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம்வைத்து எடுத்துப் பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #25 on: March 01, 2015, 02:29:03 PM »
பிளம்ஸ் லஸ்ஸி



தேவையானவை:
பிளம்ஸ் பழம்  அரை கப் (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்), புளிப்பு இல்லாத கெட்டித் தயிர்  ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - 2 துளி.

செய்முறை:
பிளம்ஸ் பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை, கெட்டித் தயிர் சேர்த்து நன்கு அடித்து, அதனுடன் ரோஸ் எசென்ஸை கலக்கவும். ஃப்ரிட்ஜில் குளிரவைத்து அருந்தவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #26 on: March 01, 2015, 02:31:17 PM »
ஃப்ரூட் ரைஸ்



தேவையானவை:
பாசுமதி அரிசி  ஒரு கப், நெய் - 4  டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய்  தலா - 2, பிரியாணி மசாலா  ஒரு டீஸ்பூன், இஞ்சி  பூண்டு பேஸ்ட்  ஒரு டீஸ்பூன், நறுக்கிய பைனாப்பிள், நறுக்கிய ஆப்பிள், திராட்சைப்பழம் (சேர்த்து)  ஒரு கப், புதினா, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, மிளகாய்த்தூள்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:
அரிசியை கால் மணி நேரம் ஊறவிட்டு வேகவைத்துக் கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து, அதில் நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து... புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். அதனுடன் இஞ்சி  பூண்டு பேஸ்ட், பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பழங்களை சேர்த்து, சாதத்தையும் போட்டுக் கிளறி, அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைத்து சிறிது நேரத்துக்குப் பிறகு இறக்கி, பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #27 on: March 01, 2015, 02:32:53 PM »
மூங்கில் அரிசி  ஃப்ரூட் ஊத்தப்பம்



தேவையானவை:
மூங்கில் அரிசி ('காதி கிராஃப்ட்’ கடைகள், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)  ஒரு கப், பச்சரிசி  ஒரு கப், உளுத்தம் பருப்பு - 4 டீஸ்பூன், மாதுளை முத்துக்கள், நறுக்கிய ஆப்பிள், பைனாப்பிள் (சேர்த்து)  அரை கப், எண்ணெய் அல்லது நெய், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
மூங்கில் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பை ஒன்றுசேர்த்து தண்ணீர் விட்டு 3 மணிநேரம் ஊறவைத்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மாவில் பழக் கலவை, உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, மாவை ஊத்தப்பமாக வார்த்து, எண்ணெய் (அ) நெய்விட்டு சுட்டெடுத்து பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #28 on: March 01, 2015, 02:34:26 PM »
மூங்கில் அரிசி  பழப் புட்டு



தேவையானவை:
மூங்கிலரிசியை நீரில் களைந்து, நிழலில் உலத்தி அரைத்த புட்டு மாவு  ஒரு கப், தேங்காய்த் துருவல்   அரை கப், சர்க்கரை  முக்கால் கப், பழத்துண்டுகள் (ஆப்பிள், பைனாப்பிள், செர்ரி)  அரை கப், நெய் - 6 டீஸ்பூன்

செய்முறை:
மூங்கில் அரிசி புட்டு மாவை சிறிது வெந்நீர் விட்டு புட்டு பதத்துக்கு பிசைந்துகொள்ளவும். இட்லித் தட்டுகளில் மாவை போட்டு ஆவியில் வேகவிடவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் வேகவைத்த மாவைப் போட்டு  பழங்கள், சர்க்கரை, நெய், தேங்காய்த் துருவல் கலந்து பரிமாறவும்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #29 on: March 01, 2015, 02:36:18 PM »
கொய்யாப்பழ கிரேவி



தேவையானவை:
கொய்யாப்பழம்  ஒரு கப் (நறுக்கியது), மிளகாய்த்தூள்  ஒன்றரை டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), பூண்டு - 6 பல் (தோல் உரிக்கவும்), வெண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:
 மிக்ஸியில் அரை கப் கொய்யாப்பழம், பூண்டு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கொய்யா துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கி, உப்பு சேர்த்து, அரைத்த கொய்யா கலவையையும் சேர்த்து கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.