Author Topic: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~  (Read 2547 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« on: March 01, 2015, 11:37:30 AM »




'ஆப்பிள் எ டே கீப்ஸ் த டாக்டர் அவே’ என்பது ஆங்கிலப் பொன்மொழி. ஆப்பிள் மட்டுமல்லாமல், அனைத்துப் பழங்களுமே, விட்டமின் உட்பட உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை அள்ள அள்ளக் குறையாமல் வாரி வழங்கும் அட்சயப்பாத்திரங்கள்தான்!
'பழங்கள் என்றால்... அப்படியே சாப்பிடலாம், ஜூஸ் செய்து பருகலாம் அல்லது சில பழங்களை நறுக்கி ஃப்ரூட் சாலட் செய்யலாம்’ என்ற பொதுக்கருத்தை மாற்றி, பழங்களை வைத்து பிரியாணி, ஊறுகாய், புட்டு, கேசரி, கிரேவி, பக்கோடா என்று விதம்விதமாக செய்துகாட்டி அசத்தும் சமையல்கலை நிபுணர் கவிதா நாகராஜ், 'உங்கள் இல்லத்தில் உணவு வேளை, உற்சாக வேளையாக விளங்கட்டும்!' என்று அன்புடன் வாழ்த்துகிறார்.




Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #1 on: March 01, 2015, 11:40:01 AM »
பலாப்பழ பிரியாணி



தேவையானவை:
பலாச்சுளை  ஒரு கப் (சதுரமாக நறுக்கவும்), பாசுமதி அரிசி -  2 கப், பிரியாணி மசாலா  ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி  பூண்டு பேஸ்ட்  ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய்  தலா - 2, பிரிஞ்சி இலை -  2, முந்திரி, உலர் திராட்சை  தலா - 2 டீஸ்பூன், வறுத்து எடுத்த வெங்காயம்  ஒரு கப், ரீஃபைண்ட் ஆயில், நெய்  தலா - 2 டேபிள்ஸ்பூன்,  புதினா, கொத்தமல்லித்தழை  தலா அரை கப், மஞ்சள்தூள்  அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள்  ஒரு டீஸ் பூன், எலுமிச்சைச் சாறு  ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:
அரிசியை முக்கால் பதத்துக்கு வேகவைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து ரீஃபைண்ட் ஆயில் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து, முந்திரி  உலர்திராட்சையையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இதனுடன் புதினா, கொத்தமல்லித்தழை, இஞ்சி  பூண்டு பேஸ்ட், நறுக்கிய பலாச்சுளை சேர்த்து, மஞ்சள்தூள், பிரியாணி மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும். வறுத்த வெங்காயம், நெய், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை இதில் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிகவும் குறைந்த தீயில் வைத்து சிறிது நேரத்துக்குப் பிறகு இறக்கவும்.
இதனை வெங்காயம்  தயிர் ராய்த்தாவுடன் பரிமாறலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #2 on: March 01, 2015, 11:49:51 AM »
ஆப்பிள்  வால்நட் க்ரெஞ்ச்



தேவையானவை:
ஆப்பிள் -  2, வால்நட் (அக்ரூட்)  அரை கப், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) -  2 டீஸ்பூன், மைதா மாவு  ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர்  அரை டீஸ்பூன், சர்க்கரை  அரை கப், ஐஸ்க்ரீம் -  2 டீஸ்பூன், நறுக்கிய பிஸ்தா  அரை டீஸ்பூன், எண்ணெய்  சிறிதளவு.

செய்முறை:
ஆப்பிளை தோல் நீக்கி, 4 துண்டுகளாக்கவும். ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி...  கரைத்து வைத்த கலவையில் ஆப்பிள் துண்டுகளை நனைத்துப் போட்டு, 4 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். சர்க்கரையை ஒரு பேனில்’ போட்டு, தண்ணீர் ஊற்றாமல் அடுப்பில் வைத்து, இளகும் வரை (பிரவுன் கலர் ஆகும் வரை) வைக்கவும். ஆப்பிள் துண்டுகளை சர்க்கரைப் பாகில் தோய்த்து எடுக்கவும். பிறகு, அவற்றை  ஐஸ் வாட்டரில் நனைத்து எடுத்து பரிமாறும் தட்டில் வைக்கவும். மீதமுள்ள சர்க்கரைப் பாகில் வால்நட்டை போட்டு புரட்டி, ஆறியதும் ஒன்று இரண்டாக பொடிக்கவும். ஆப்பிள் துண்டின் மேல் சிறிது ஐஸ்கிரீம் போட்டு அதன் மீது வால்நட் தூளை தூவி, பிஸ்தாவையும் தூவி பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #3 on: March 01, 2015, 11:51:26 AM »
பலாப்பழ ஊறுகாய்



தேவையானவை:
பலாப்பழம்  அரை கிலோ, மஞ்சள்தூள்  அரை டீஸ்பூன், கறுப்பு சீரகம்  ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், வெந்தயம், பிளாக் சால்ட்  தலா ஒரு டீஸ்பூன், கடுகு எண்ணெய் - 125 கிராம், உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:
பலாப்பழத்தை துண்டுகளாக்கி வெயிலில் 2 மணி நேரம் காயவைத்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள், பிளாக் சால்ட், கடுகு, வெந்தயம், கறுப்பு சீரகம், மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, அத்துடன் பலாப்பழ துண்டுகள், உப்பு சேர்த்து பாட்டிலில் போடவும். கடுகு எண்ணெயைக் காயவைத்து, ஆறியதும் அந்தக் கலவையில் கொட்டி நன்கு குலுக்கவும்.
இதை பல நாட்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #4 on: March 01, 2015, 11:52:54 AM »
கிவி ஐஸ்க்ரீம்



தேவையானவை:
கிவி பழம் (நறுக்கியது)  ஒரு கப், பைனாப்பிள் ஜூஸ் -  2 கப், சர்க்கரை  அரை கப்.

செய்முறை:
அரை கப் கிவி பழத்தை கூழாக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் பைனாப்பிள் ஜூஸ், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி, அடுப்பில் வைத்து கூழ்பதத்துக்கு வந்தவுடன் இறக்கவும். ஆறியதும் மீதமுள்ள கிவி பழத்துண்டுகளை சேர்த்து, சிறிய கப்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 6 மணி நேரம் (ஃப்ரீசரில்) வைத்து எடுத்துச் சாப்பிடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #5 on: March 01, 2015, 11:54:57 AM »
முந்திரி  கிவி குருமா



தேவையானவை:
வெங்காயம் (நறுக்கியது)  ஒரு கப், இஞ்சி  பூண்டு பேஸ்ட்  ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை  அரை கப், கிவி பழம் - 2 (அரைக்கவும்), தேங்காய்ப்பால்  ஒரு கப், முந்திரி -  4 டேபிள்ஸ்பூன் (வேகவைக்கவும்), கெட்டித் தயிர்  அரை கப், பச்சை மிளகாய்  - 4 (பொடியாக நறுக்கவும்), கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள்  தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி  பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், அரைத்த கிவிப்பழக் கூழ், உப்பு சேர்த்து  வதக்கி, கெட்டித் தயிரைச் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் வேகவைத்த முந்திரி சேர்த்து நன்கு வதங்கியதும், தேங்காய்ப் பாலை ஊற்றி நுரை கட்டும் வரை அடுப்பில் வைத்து, பின்பு கொத்தமல்லித் தழையைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #6 on: March 01, 2015, 11:57:00 AM »
பட்டர் ஃப்ரூட் பரோட்டா



தேவையானவை:
பட்டர் ஃப்ரூட் (அவக்காடோ) கூழ்  ஒரு கப், கோதுமை மாவு - 2 கப், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித் தழை  சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம்  அரை கப், சீரகத்தூள்  ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய்  தலா - 2 டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:
அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, சீரகத்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, வெங்காயம், பட்டர் ஃப்ரூட் கூழ் ஆகிவற்றை சேர்த்து பரோட்டா மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவும். மாவை வட்ட வடிவத்தில் திரட்டவும். தோசைக்கல்லை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பரோட்டாவை போட்டு, இரு புறமும் சிவந்ததும், சிறிது நெய் தடவி எடுத்துப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #7 on: March 01, 2015, 11:59:02 AM »
சாக்லேட் டிப்டு ஸ்ட்ராபெர்ரி



தேவையானவை:
ஸ்ட்ராபெர்ரி பழம்  ஒரு கப் (இலையுடன் உள்ளது), மெல்டட் சாக்லெட்  ஒரு கப், வெண்ணெய்  ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
 ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு கழுவி துணியில் துடைத்துக் கொள்ளவும். மெல்டட் சாக்லேட்டுடன் வெண்ணெயை சேர்க்கவும். இதில் பழத்தை நன்கு 'டிப்’ செய்து (மூழ்கவைத்து), எடுத்து 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #8 on: March 01, 2015, 12:00:54 PM »
அவக்காடோ பச்சடி



தேவையானவை:
நறுக்கிய அவக்காடோ  ஒரு கப், சிறிய பச்சை மிளகாய் - 5, புளி  சிறிய உருண்டை, சீரகம்  அரை டீஸ்பூன், கெட்டித் தயிர்  அரை கப், கடுகு  அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன், மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் புளியைக் கெட்டியாக கரைத்து, அத்துடன் நறுக்கிய அவக்காடோ, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கெட்டித் தயிர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி... கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதனை பிசைந்து வைத்த கலவையில் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #9 on: March 01, 2015, 12:02:11 PM »
மாம்பழ அல்வா



தேவையானவை:
மாம்பழக் கூழ்  ஒரு கப், ரவை, சர்க்கரை, நெய்  தலா அரை கப், பொடியாக நறுக்கிய முந்திரித் துண்டுகள் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள்  அரை டீஸ்பூன்,  தண்ணீர்  ஒரு கப்.

செய்முறை:
அடுப்பில் கெட்டியான வாணலியை வைத்து சிறிது நெய் விட்டு சூடாக்கி, ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சர்க்கரையைப் போட்டு, தண்ணீர் சேர்த்து கம்பி பதத்தில் பாகு காய்ச்ச வும். வறுத்த ரவையை அதில் சேர்த்து வேகும் வரை கிளறி, மாம்பழக் கூழ், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை ஊற்றி வேகவிட்டு, நெய் பிரிந்து வரும்போது இறக்கி, முந்திரி சேர்த்துப் பரிமாறவும் (கேக் போல துண்டுகள் போட்டும் பரிமாறலாம்).

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #10 on: March 01, 2015, 02:03:21 PM »
தர்பூசணி  கிர்ணிப் பழம் சாலட்



தேவையானவை:
தர்பூசணி, கிர்ணிப் பழம் ('ஸ்கூப்பர்’ மூலம் எடுத்தது)  தலா ஒரு கப், ஆரஞ்சு சாறு  அரை கப், பிளாக் சால்ட்  அரை டீஸ்பூன், மிளகுத்தூள்  ஒரு டீஸ்பூன், செலரி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்)  அரை டீஸ்பூன், தேன், எலுமிச்சைச் சாறு  தலா ஒரு டீஸ்பூன், உப்பு  சிறிதளவு.

செய்முறை:
ஒரு   பெரிய கப்பில் ஸ்கூப் பண்ணிய தர்பூசணி, கிர்ணிப்பழத்தை வைக்க வும். மற்றொரு கப்பில் ஆரஞ்சு சாறு, எலுமிச்சை  சாறு, செலரி, பிளாக் சால்ட், மிளகுத்தூள், தேன், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து, ஸ்கூப் செய்த பழங்களுடன் கலக் கவும். சிறிய கப்களில் போட்டுப் பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #11 on: March 01, 2015, 02:04:59 PM »
ஆப்பிள் பர்ஃபி



தேவையானவை:
துருவிய ஆப்பிள் - 2 கப், தேங்காய்த் துருவல்  ஒன்றரை கப், சர்க் கரை  அரை கப், சீவிய பிஸ்தா  ஒரு டேபிள்டீஸ்பூன், நெய்  ஒரு டேபிள்டீஸ்பூன், உப்பு  ஒரு துளி.

செய்முறை:
வாணலியில் சிறிதளவு நெய் விட்டு காய வைத்து... தேங்காய்த் துருவல், ஆப்பிள் துருவல், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும். பர்ஃபி பதத்துக்கு வந்ததும் இறக்கி, ஒரு தட்டில் சிறிது நெய்யை தடவி அதில் கலவையைப் போட்டு பரப்பி, சீவிய பிஸ்தாவை தூவவும். ஆறியதும் துண்டுகளாக்கி சாப்பிடவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #12 on: March 01, 2015, 02:06:29 PM »
மாம்பழ கேக்



தேவையானவை:
மாம்பழக்கூழ்  அரை கிலோ, பொடித்த சர்க்கரை  ஒரு கப், ஏலக்காய்த்தூள்  அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
ஒரு கெட்டியான பாத்திரத்தில் மாம்பழ கூழ், சர்க்கரை பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கி அடுப்பில் வைத்து 15 நிமிடம் வேகவிடவும். வெந்ததும், நெய் தடவிய தட்டில் இந்தக் கலவையைப் போட்டு பரப்பி, நன்கு ஆறியதும், துண்டுகள் போட்டு பரிமாறவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #13 on: March 01, 2015, 02:08:15 PM »
மாம்பழ கொத்சு



தேவையானவை:
மாம்பழம்  ஒன்று, வெந்தயம்  கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு, மல்லி (தனியா)  தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 6, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்  சிறிதளவு, புளி  நெல்லிக்காய் அளவு, எண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:
மாம்பழத்தை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விடாமல் கடலைப்பருப்பு, மல்லி, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் தாளித்து, மாம்பழத்தைச் சேர்த்து குழைய வேகவிடவும். வெந்த மாம்பழக் கலவையில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள், அரைத்து வைத்த பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃப்ரூட் சமையல்! ~
« Reply #14 on: March 01, 2015, 02:11:08 PM »
ஆரஞ்சு ரைஸ்



தேவையானவை:
பாசுமதி அரிசி - 2 கப், ஆரஞ்சுப் பழச்சாறு - 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம்  ஒரு கப், இஞ்சி  பூண்டு விழுது  ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, சர்க்கரை  கால் கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு, நெய்  சிறிதளவு, உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை:
ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளவும். குக்கரில் சிறிதளவு நெய் விட்டு... நறுக்கிய வெங்காயம், இஞ்சி  பூண்டு விழுது, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் ஆரஞ்சுப் பழச்சாறு, களைந்த அரிசி, உப்பு, ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடவும். மூன்று விசில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.