Author Topic: ~ நெல்லிக்காய் போளி! ~  (Read 449 times)

Online MysteRy

~ நெல்லிக்காய் போளி! ~
« on: February 27, 2015, 12:21:34 AM »
நெல்லிக்காய் போளி!



தேவையானவை:
மைதா மாவு - 200 கிராம், நெல்லிக்காய் - 10, கடலைப்பருப்பு  ஒரு கப், பொடித்த வெல்லம் - 2 கப், தேங்காய்  ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்), பாதாம், முந்திரி   தலா- 10, ஏலக்காய்த்தூள்  சிறிதளவு, நெய்  அரை கப், கேசரி பவுடர்  ஒரு சிட்டிகை.

செய்முறை:
மைதா மாவை 2  ஸ்பூன் நெய் விட்டு, கேசரி பவுடர், தண்ணீர் சேர்த்து  போளி மாவு பதத்துக்கு கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து எடுத்து, நெல்லிக்காயை அதில் போட்டு மூடிவைத்து ஆறியவுடன்,  நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி, தண்ணீர் விடாமல் நைஸாக மிக்ஸியில் அரைக்கவும். வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஊறவைத்து, வேகவைத்து எடுத்து வைக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.  கடாயை அடுப்பில் வைத்து, சிறிதளவு நெய் விட்டு... நெல்லிக்காய் விழுது, கடலைப்பருப்பு  தேங்காய் விழுது, பொடித்த முந்திரி  பாதாம், வெல்லப்பாகு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பூரணம் தயாரித்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு வாழை இலையில் நெய் தடவி, பிசைந்து வைத்த மைதா மாவை சிறிய வட்டமாக இட்டு, நடுவில் பூரணம் வைத்து மூடி போளியாகத் தட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, தோசைக்கல்லை போட்டு காய்ந்ததும் தட்டி வைத்த போளியைப் போட்டு, நெய் விட்டு, திருப்பிப் போட்டு, மீண்டும் நெய் விட்டு வெந்ததும் போளிகளை எடுத்து தாம்பாளத்தில் அடுக்கி வைக்கவும்.