Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ தலை அரிக்குதா? தயிரும், வெந்தயமும் போதும்! இயற்கை வைத்தியம்! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ தலை அரிக்குதா? தயிரும், வெந்தயமும் போதும்! இயற்கை வைத்தியம்! ~ (Read 1806 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226860
Total likes: 29028
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ தலை அரிக்குதா? தயிரும், வெந்தயமும் போதும்! இயற்கை வைத்தியம்! ~
«
on:
February 26, 2015, 10:44:48 PM »
தலை அரிக்குதா? தயிரும், வெந்தயமும் போதும்! இயற்கை வைத்தியம்!
கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். மன அழுத்தம் இன்றி அமைதியை கடைபிடித்தால் பொடுகு வராமல் தவிர்க்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு.
சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். அரிப்பு நீங்கவும்,
பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை
தெரிவிக்கின்றனர்
அழகியல் நிபுணர்கள்.
உஷ்ணம் நீக்கும் வெந்தயம்
வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து
பொடுகுத் தொல்லை தீரும்.
மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து
சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்".
தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி,
தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.
பாசிப்பயறு, தயிர்
பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்து
பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து
ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு
அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
வேப்பிலை, துளசி
பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை.
எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை
பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி
ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம்
கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி,
கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன்
கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து
குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.
வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து,
அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து
வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு
மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு
குளித்தாலும் பொடுகு நீங்கும்.
தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில்
சிறிதளவு வினிகர் சேர்த்து குளிக்கலாம்.
மருதாணி இலை தூள்
வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து,
சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால்,
பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி,
தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம்
கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர
பொடுகு நீங்கும்.
தேங்காய் பால்
தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து,
சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு
மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.
முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து,
மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம்.
முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில்
தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.
சரும அரிப்பு
சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை
சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில்
தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்பொடுகு
பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், வினிகரை பீட்ரூட் வேக வைத்த
நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகைப்
போக்கிவிடலாம்.
பொடுகு
பொடுகு என்றால் என்ன ?
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.
பொடுகு ஏன் வருகிறது?
1. வரட்சியான சருமத்தினால் வரும்
2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.
3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது
4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்
5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.
6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்
7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.
8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்
பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது
2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்
3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்
பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?
1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.
2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.
3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்
4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.
5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்
6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.
7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது
8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்
10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்
11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்
12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.
13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.
14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.
15. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
16. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
17. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.
18. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
19. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
20.ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ தலை அரிக்குதா? தயிரும், வெந்தயமும் போதும்! இயற்கை வைத்தியம்! ~