Author Topic: ~ வரகு குழிப்பணியாரம் ~  (Read 430 times)

Offline MysteRy

~ வரகு குழிப்பணியாரம் ~
« on: February 13, 2015, 11:44:45 AM »
வரகு குழிப்பணியாரம்



தேவையானவை:
வரகு அரிசி மாவு - ஒரு கப், கோதுமை மாவு - அரை கப், வாழைப்பழம் - 2, வெல்லம் - அரை கப், ஏலப்பொடி - கால் டீஸ்பூன்,  தேங்காய்த்துருவல் - கால் கப், நெய் - தேவைக்கு ஏற்ப.

செய்முறை:
வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வரகு அரிசி மாவு, கோதுமை மாவு, ஏலப்பொடி, நறுக்கிய வாழைப்
பழம், வெல்லக் கரைசல் சேர்த்து அடிக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து, அடித்துக் கொள்ளவும். துருவிய தேங்காய் சேர்த்துக்கொள்ளவும். இட்லி மாவுப் பதத்தில் மாவு இருக்க வேண்டும். குழிப்பணியாரக் கல்லைச் சூடாக்கி, சிறிது நெய் ஊற்றி, குழிகளில் மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் குழிப்பணியாரம் ரெடி.