Author Topic: காதலியின் தேவை  (Read 957 times)

Offline Global Angel

காதலியின் தேவை
« on: December 19, 2011, 02:25:51 PM »
காதலியின் தேவை

என் மவுனங்களையும் எண்ணங்களையும்
சொல்லில் வராத வார்த்தைகளையும்
கண்களின் மொழியில் புரிந்து
கொள்ளும் இதயம் தேவை.....
ஏதேதோ எண்ணங்களில் புரண்டாலும்

கண்ணுறங்கும் வேளையில்
என்னுருவம் இமைகளில் பொருத்தி
உறங்கும் இதயம் தேவை....
என் கண்ணோரம் துளிர்க்கும்
சிறுதுளி கண்*ணீரையும்
உணர்ந்து கலங்கி தவிக்கும்
அன்பு இதயம் தேவை....
மொத்தத்தில் என்னையும் நேசிக்கும்
இதயம் தேவையில்லை
என்னை மட்டுமே நேசிக்கும்
காதல் இதயம் தேவை.....
                    

Offline RemO

Re: காதலியின் தேவை
« Reply #1 on: December 21, 2011, 05:34:38 AM »
// மொத்தத்தில் என்னையும் நேசிக்கும்
இதயம் தேவையில்லை
என்னை மட்டுமே நேசிக்கும்
காதல் இதயம் தேவை.....//


anaivarum virumbuvathu ithu thaan