Author Topic: ~ ஆளி விதை இட்லிப் பொடி ! ~  (Read 421 times)

Offline MysteRy

~ ஆளி விதை இட்லிப் பொடி ! ~
« on: February 02, 2015, 08:22:02 PM »
ஆளி விதை இட்லிப் பொடி !



என்னென்ன தேவை?

ஆளி விதை ( FLAX SEED ),
கடலைப் பருப்பு, உளுந்து தலா 1 கப்
பூண்டுப் பல் 8 (தோலுடன்)
காய்ந்த மிளகாய் - 15
பெருங்காயம், உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் ஆளி விதையை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். இது எள் போன்று பொரியும் தன்மை கொண்டது. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய்ந்த மிளகாய், பூண்டு, கடலைப் பருப்பு, உளுந்து,பெருங்காயம் முதலியவற்றைத் தனித் தனியாக வறுக்கவும். மிக்ஸியில் முதலில் மிளகாய், கடலைப்ருப்பு, உளுந்து, உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் ஆளி விதை, பூண்டு இரண்டையும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

ஆளி விதையுடன் மிளகு, சீரகம் சேர்த்து வறுத்துப் பொடிசெய்து வைத்துக் கொண்டால் சூப், ஆம்லெட், சாலட்,தோசை ஆகியவற்றின் மேல் தூவலாம். எள் துவையல் போன்று துவையல் அரைத்தும் சாப்பிடலாம். இனிப்பான எள் உருண்டை போலவும் செய்தும் சாப்பிடலாம். இது ஏறத்தாழ எள் போன்றது. ஆனால் எள்ளைவிட கொஞ்சம் பெரிதாக இருக்கும். இதில் ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு இருக்கிறது. அதிக நார்ச்சத்து கொண்டது. வைட்டமின் ஏ, பி, டி, கால்சியம், மக்னீஷியம், புரதம் போன்ற பல சத்துக்கள் கொண்டது. அசைவம் பிடிக்காதவர்களுக்கு இந்த ஆளிவிதை மிக உன்னதமான உணவு. இதயத்துக்கு நல்லது. இந்த விதை, மருந்துக் கடைகளில் கிடைக்கும்.