Author Topic: ~ குளிர்கால டிப்ஸ் ~  (Read 494 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ குளிர்கால டிப்ஸ் ~
« on: February 01, 2015, 06:57:50 PM »
தலைபாரம், தலைவலி நீங்க...



தலையில் நீர் கோப்பதனாலும், ஜல தோஷத்தின் தொடக்க நிலையிலும் தலைவலி, தலைபாரம் வந்து பாடாய்ப்படுத்தும். அந்த மாதிரி நேரங்களில், தலை மட்டும் வலித்தால் சுக்கை நீர் விட்டு உரசி நெற்றியில் பற்று போடலாம். ஒரு கிராம்பு அதே அளவு சுக்கு, 4 துளசி இலை சேர்த்து அரைத்து சூடுபடுத்தி பொறுக்கும் சூட்டில் நெற்றியில் பற்று போட்டாலும் தலைவலி குறையும். தலையில் நீர் கோத்திருக்கும்போது நொச்சி இலையை ஆவி (வேது) பிடிப்பதாலும், நொச்சி இலையை தலையணையில் வைத்து தூங்குவதாலும் பிரச்னைகள் சரியாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குளிர்கால டிப்ஸ் ~
« Reply #1 on: February 01, 2015, 06:58:40 PM »
மூக்கடைப்பு விலக...



ஜலதோஷம், சளிப்பிரச்னையால் மூக்கடைப்பு ஏற்பட்டு அவதிப்படும் வேளையில் ஜாதிக்காயை நீர் விட்டு உரசி கரண்டியில் வைத்து சூடுபடுத்தி பொறுக்கும் சூட்டில் மூக்கின் மேல் பற்று போட்டால் நிவாரணம் கிடைக்கும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் உகந்தது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குளிர்கால டிப்ஸ் ~
« Reply #2 on: February 01, 2015, 06:59:24 PM »
தொண்டைவலி, தொண்டைக்கட்டுதல் சரியாக...



சளிப் பிரச்னையின் தொடக்கமாக தொண்டை கட்டிக்கொண்டு வலி வந்து பாடாய்ப்படுத்தும். சிலருக்கு குரலே மாறிவிடும். அந்த மாதிரி நேரங்களில் சுண்ணாம்புடன் தேன் கலந்து குழைத்து தொண்டையில் பற்று போடலாம். குப்பைமேனி இலையுடன் சுண்ணாம்பு கலந்தும் பற்று போடலாம். கிராம்பை தண்ணீர் விட்டுக் கொதிக்கவைத்து அதன் கஷாயத்துடன் தேன் கலந்து குடித்தாலும் பிரச்னை சரியாகும். இந்த மாதிரி நேரங்களில் வெந்நீரில் கல் உப்பு கலந்து தொண்டையை நனைத்து நீரைக் கொப்புளிப்பது நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குளிர்கால டிப்ஸ் ~
« Reply #3 on: February 01, 2015, 07:01:22 PM »
சளிப் பிரச்னை சரியாக...



சளி பிடித்திருந்தால் தூதுவேளை துவையல், ரசம் மற்றும்  இஞ்சித் துவையல், கொள்ளுத் துவையல் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.  மேலும் மதிய உணவின்போது, சின்ன வெங்காயத்தை பச்சையாக உரித்து சாப்பிட்டு வரலாம். மிளகு ரசமும் கைகொடுக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குளிர்கால டிப்ஸ் ~
« Reply #4 on: February 01, 2015, 07:02:08 PM »
நெஞ்சுச்சளி விலக...



நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு சிரமப்படுகிறீர்களா? வேலிகளில் வளர்ந்து கிடக்கும் முசுமுசுக்கை இலையை தோசை மாவுடன் கலந்து, தோசை வார்த்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். ஏலக்காயைப் பொடி செய்து நெய்யுடன் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.