Author Topic: கால் வெடிப்புப் போக என்ன செய்ய வேண்டும்? ஆயுர்வேத மருத்துவத்தில் என்ன தீர்வு?  (Read 538 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
“எனக்கு 36 வயது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என்று எந்த பிரச்னையும் இல்லை. பாதங்களில் வெடிப்பு அதிகமாக இருக்கிறது. எனது சேலை, மாட்டி இழுக்கும் அளவுக்கு வெடிப்புப் பெரிதாக இருக்கிறது. கால் வெடிப்புப் போக என்ன செய்ய வேண்டும்? ஆயுர்வேத மருத்துவத்தில் என்ன தீர்வு?”



“தோல் வறட்சியினால், ஏற்படும் பாதவெடிப்பு விரைவில் குணப்படுத்தக்கூடியதே. பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை, வயது, மற்ற நோயின் பாதிப்பு, உட்கொள்ளும் மாத்திரையின் பக்கவிளைவு ஆகியவற்றின் அடிப்படையில் ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கப்படும். உங்களுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். தைராய்டு பிரச்னை, உடல் பருமன் போன்ற காரணங்களாலும்  வெடிப்புகள் அதிகமாகியிருக்கலாம். எனவே, எதனால் வெடிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.

ஆயுர்வேத முறையில், வெடிப்பு பிரச்னைக்கு சர்வகாய அபயங்கா, படாபயங்கா, பிழிச்சிலி, விரேச்சன் போன்ற கஷாயங்கள் பரிந்துரைக்கப்படுகிறன. தவிர, பாதத்தில், ஆயுர்வேத கிரீம், எண்ணெய் தடவுவதன் மூலம் வெடிப்பைக் குறைக்கலாம். வெடிப்பின் வீரியத்தைப் பொறுத்து, பஞ்சகர்மா சிகிச்சையும் பரிந்துரைக்கப்படும். இவற்றை செய்தால் 2-3 வாரங்களில் முழுமையாகத் தீர்வு காணலாம்.

பாத வெடிப்பு பிரச்னையைத் தவிர்க்க, தேயிலை மர எண்ணெய், யூக்கலிப்டஸ் எண்ணெய், எலுமிச்சை எண்ணெய் ஆகியவற்றை சில துளிகள் தண்ணீரில் விட்டு கொதிக்கவைத்து, வெதுவெதுப்பான சூட்டில் பாதத்தை நனைத்தால், நல்ல பலன் தெரியும். மசாஜ் செய்வது, மருத்துவரின் ஆலோசனைப்படி ஹெர்பல் கிரீம்களை பாதத்தில் தடவுவது, இரவில் தூங்கப்போகும் முன் மாய்ஸ்சரைசிங் லோஷன் தடவி, காட்டன் சாக்ஸ் அணிவது போன்றவற்றின் மூலம் பாத வெடிப்பு வராமல் தடுக்க முடியும். நீண்ட நேரம் நிற்பது, மெலிதான தோல் செருப்பு அணிவதைத் தவிர்ப்பது நல்லது.”