Author Topic: ~ 3 ஸ்டார் ரெசிப்பி!!! ~  (Read 472 times)

Offline MysteRy

~ 3 ஸ்டார் ரெசிப்பி!!! ~
« on: January 30, 2015, 08:29:02 PM »


'எப்போதும், உடல் சிக்கென இருப்பதற்கு தினமும் அருந்தும் நெல்லிக்காய்  ஜூஸ்தான் காரணம்'' என்கிறார் நடிகை அமலாபால். அவர் விரும்பிச் சாப்பிடும் ரெசிப்பிகளை செய்துகாட்டுகிறார் சென்னை, ராதா பார்க் இன் ஹோட்டல் செஃப் கோபிநாத். ரெசிப்பிகளின் பலன்களைப் பட்டியலிடுகிறார் இந்தியன் டயட்டீஷியன் அசோசியேஷனின் சென்னை பிரசிடெண்ட் குந்தலா ரவி.

Offline MysteRy

Re: ~ 3 ஸ்டார் ரெசிப்பி!!! ~
« Reply #1 on: January 30, 2015, 08:31:40 PM »
பார்பிக்யூ சிக்கன்:



தேவையானவை:

சிக்கன்  இரண்டு பெரிய துண்டுகள் (கால் கிலோ), பார்பிக்யூ சாஸ், ரெட் சில்லி பேஸ்ட், தக்காளி சாஸ்  தலா ஒரு டீஸ்பூன், நன்றாக அரைத்துக் காயவைத்த வெங்காயப் பொடி, மிளகுத்தூள்  தலா ஒரு சிட்டிகை, நறுக்கிய பூண்டு  5, துளசி  2 இலை, ஆலிவ் ஆயில்  2 டீஸ்பூன்.

பார்பிக்யூ சாஸ்:

ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன், நன்றாக அரைத்த வெங்காயம் அரை ஸ்பூன், இரண்டு தக்காளி அரைத்த விழுதைச் சேர்த்துகொள்ளவும். 85 கிராம் நாட்டு சர்க்கரை, வினிகர் 3 டேபிள் ஸ்பூன், தக்காளி சாஸ் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்தால் பார்பிக்யூ சாஸ் ரெடி.

செய்முறை:

பார்பிக்யூ சாஸ், ரெட் சில்லி பேஸ்ட், தக்காளி சாஸ், வெங்காயக் கலவை, பூண்டுத் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஆலிவ் ஆயில் சேர்த்து, சிக்கன் மீது தடவி, இரண்டரை மணி நேரம் வரை ஊறவைக்கவும். கம்பியில் சிக்கனை மாட்டி, நெருப்பில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காட்டவும். பார்க்கப் பொன் நிறத்தில் வந்தவுடன் எடுத்துவிடவும். சிக்கனுடன் காரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்:

புரதச்சத்து நிறைந்தது. எண்ணெயில் பொரிக்காமல் சமைப்பதால், இதய நோயாளிகள் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின் பி6  செல்கள் பழுதடையாமல் பார்த்துக்கொள்ளும். நியாசின் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும். ஆலிவ் ஆயில் சேர்த்துக்கொள்வதால் இதயம், சருமத்துக்கு மிகவும் நல்லது.

Offline MysteRy

Re: ~ 3 ஸ்டார் ரெசிப்பி!!! ~
« Reply #2 on: January 30, 2015, 08:33:43 PM »
வாழைப்பழம்  பசலை சாலட்



தேவையானவை:

 பச்சை வாழைப்பழம், தக்காளி  தலா 2, பசலைக் கீரை  அரைக் கட்டு, மஞ்சள் குடமிளகாய்  பாதி, செர்ரி தக்காளி  8, கருப்பு உப்பு (black salt)  ஒரு சிட்டிகை, கறி பவுடர்  ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில், லெமன் ஜுஸ், தேங்காய் விழுது, முந்திரி சீஸ்  தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

வாழைப்பழம், பசலைக் கீரை, தக்காளி, குடமிளகாய், செர்ரி அனைத்தையும் துண்டு துண்டாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து, கறி பவுடர், ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸ், தேங்காய் க்ரீம், முந்திரி சீஸ் சேர்த்தால், சாலட் ரெடி.

பலன்கள்:

பொட்டாஷியம் நிறைந்த உணவு. நொறுக்குத் தீனிக்குப் பதில் இதனை சாப்பிடலாம். உணவுகளில் கிடைக்கும் சக்திக்கு நிகரான சக்தியைக் கொடுக்கும். பசலைக் கீரை நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டும். கண்களுக்கு நல்லது. காய்களும் சேர்ந்திருப்பதால், உடலுக்குச் சத்துக்களைக் கொடுத்து, மிகவும் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

Offline MysteRy

Re: ~ 3 ஸ்டார் ரெசிப்பி!!! ~
« Reply #3 on: January 30, 2015, 08:35:51 PM »
நெல்லிக்காய் ஜுஸ்



தேவையானவை:

 நெல்லிக்காய் 3, துளசி  2 இலைகள், இளநீர், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

நெல்லிக்காயைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு, இளநீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். இதில் உப்பு, துளசி இலைகள் சேர்த்து அருந்தவும்.

பலன்கள்:

செரிமானப் பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொண்டால் புற்று நோய், இதயப் பிரச்னைகள் வராது. நெல்லிக்காய் சாப்பிடுவதால், ஜலதோஷம் பிடிக்கும் என்பது தவறு. தொண்டைத் தொற்றுகளை நீக்கக்கூடியது.

குறிப்பு:

உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் உப்பும், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையையும் சேர்க்கக் கூடாது.