Author Topic: இதயத்தை திருப்பியே தராதே!  (Read 973 times)

Offline Global Angel

இதயத்தை திருப்பியே தராதே!

என் இதயம்
பணயமாக இருக்கட்டும்
எனக்கு உன் காதலைக்
கடனாகக் கொடு.

அதற்கான வட்டியாக
தினமும் நான் உனக்கு
என் காதலைக் கட்டினாலும்
ஒரு மகா மோசமான
கந்து வட்டிக்காரியைப் போல
உன் இதயம் மூழ்கிவிட்டது
என்று
கடைசிவரை என் இதயத்தை
நீ திருப்பியே தராதே!