Author Topic: ~ பிரக்ஞா பிராண கிரியா முத்திரை ~  (Read 405 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226865
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பிரக்ஞா பிராண கிரியா முத்திரை

ஆள்காட்டி விரலை மடித்துக் கட்டை விரலின் அடிபாகத்தில் படும் படி லேசாக அழுத்திப் பிடிக்கவும். மற்ற விரல்கள் நேராக நீண்டிருக்கும் படி வைக்கவும், உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு கால் முட்டியின் மீது வைக்கவும்.

முடிந்தவர்கள் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்தால் அதிக பலன் கிடைக்கும். முடியாதவர்கள் சம்மணமிட்டு அமர்ந்து செய்யுங்கள்.

பயன்கள் :

தியான முத்திரைகளில் மற்றொரு படியாக உள்ளது இந்த பிரக்ஞா பிராண கிரியா முத்திரை. இதைச் செய்வதன் மூலம் நமது ஆதார சக்கரங்களில் சக்தி பெருகும். குறிப்பாக மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் இரண்டும் பலம் பெறும். சக்கரத்தில் உள்ள சக்தி குறைபாடுகள் நீங்கும்.

இம்முத்திரை செய்வதன் மூலம், உயர் ரத்த அழுத்தம் குறைந்து, டென்ஷன் குறையும், இதயத் துடிப்பு சீராகி, படபடப்பு குறையும், மூச்சும் சீராகும், நிம்மதி அற்ற நிலை நீங்கும். உடலின் அனைத்துப் பாகங்களும் ஆற்றல் பெறும்.

மனம் அமைதி பெறும். மூளைக்கு அதிகளவு ரத்த ஓட்டம் செல்வதால், மூளை சுறுசுறுப்பாகி ஞாபக சக்தி பெருகும்.

குறிப்பு: குறை ரத்த அழுத்தம் (Low Blood Pressure) உள்ளவர் இந்த முத்திரை செய்ய வேண்டாம்.