Author Topic: Nan Sutta Kavithaigal  (Read 4513 times)

Offline pEpSi

Nan Sutta Kavithaigal
« on: July 16, 2011, 01:50:18 PM »
நட்பின் வசந்தம்...

இலையுதிர் காலங்களில்
ஒவ்வொரு இலையும் நானாவேன்
நம் நட்புக்கு உரமாக

மழைக்காலங்களில்
ஒவ்வொரு மழைத்துளியும் நானாவேன்
நம் நட்பை பெரும் வெள்ளமாக்க..

வெயில் காலங்களில்
ஒவ்வொரு நிழலும் நானாவேன்
நம் நட்பு கருகாமல் இருக்க..

வசந்த காலங்களில்
மலையும் நதியும்
நிலமும் வானும்
மலரும் செடியும்
மொத்தமாய் எல்லாமே நானாவேன்
நம் நட்பு முழு வசந்தமாக..

Offline pEpSi

Re: Nan Sutta Kavithaigal
« Reply #1 on: July 16, 2011, 01:51:30 PM »
நண்பா 
திருமலை மூர்த்தி!
என் வாழ்க்கைப் பயணத்தில்
உறவு கொண்டு வந்த
ஒரே மனிதன்..

நீ
என் சகாராப் பாதையில்
நைல் நதி!

வசந்த காற்றை
என் வாசலுக்கு
அழைத்து வந்தவன்!

என் கோடை காலத்தின்
குளிர் நிலவு!

என் இருண்ட காலங்களில்
கிழக்கு வானம்!

என்
பொட்டல் வெளியில்
போதி மரம்!

என் அழுத விழிகளை
பழுது பார்த்தவன்!

துவண்டு கிடந்த என்னை
தூக்கி நிறுத்தியவன்!

என் வாசலுக்கு
தெரியாமல் வந்துவிட்ட
அதிர்ஷ்ட தேவதை
கேட்காமல்
கொடுத்த வரம்!

நன்றி நண்பா
உன் நட்புக்கு
கைமாறு செய்ய
நான் என்ன செய்ய?

Offline Global Angel

Re: Nan Sutta Kavithaigal
« Reply #2 on: July 16, 2011, 08:03:05 PM »
nice kavithai santhu....... rompa nalla erukku thani thaniya pootaa ellarum unga kavithaya rasichu comend pannuvanga santhu


aama keeka maanthuten police aunty enna pnraangoooooooo ;) ;)