Author Topic: ~ ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிப்பது ஆரோக்கியமானது? ~  (Read 598 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிப்பது ஆரோக்கியமானது?

அதிகரிக்கும் இதயத்துடிப்பு இதயகுழலிய ஆரோக்கியத்தின் மீது காப்ஃபைனின் தாக்கங்கள் ஒரு ஊக்குவிக்கியாக செயல்படும். உங்கள் நரம்பியல் அமைப்பில் பதற்றத்தை ஏற்படுத்தும். இதனால் ஊக்குவிக்கப்பட்ட நிலைக்கு உங்கள் இதயம் செயல்பட அது அழுத்தத்தை போடும்.

இதனால் உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கும். இதய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது பெரும் ஆபத்தாக விளங்கும். அதனால் குறிப்பிட்ட அளவில் மட்டும் காபி குடித்து ஆரோக்கியமாக இருங்கள்.

பதற்றமும் அமைதியின்மையும் காபி குடித்தால் தூக்கம் களையும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அதன் பின்னணி என்ன என உங்களுக்கு தெரியுமா? அதிகளவிலான விழிப்புணர்வு, அதிகரிக்கும் இதயத் துடிப்பு மற்றும் அட்ரினாலின் அதிகரிப்பு ஆகியவைகள் உங்களின் பதற்றத்தை அதிகரிக்கும்.

காபியின் மோசமான உடல்நல தாக்கங்களின் ஒன்று – உங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி, இயல்பான சூழ்நிலைகளிலும் உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கும்.

தலை வலி காபியினால் பல வகையான உடல்நல தாக்கங்கள் இருந்தாலும், அதனை அதிகமாக பருகும் போது உங்கள் மூளை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, அதனால் தொடர்ச்சியாக தலை வலி ஏற்படும். இது ஒரு ஊக்குவிக்கியாகவும், சிறுநீர்ப் பிரிப்பியாகவும் செயல்படுகிறது. அதனால் மூளை அதிக நேரம் வேலை செய்யும் சூழல் உருவாகும். அதனால் தான் தலை வலி ஏற்படுகிறது.

எரிச்சல் சில கப் காபியை பருகிய பிறகு, உங்களுக்கு சீக்கிரத்திலேயே எரிச்சல் ஏற்படுகிறதா? அல்லது எளிதில் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? அப்படியானால் காபி குடிக்கும் அளவை நீங்கள் குறைக்க வேண்டும்.

உங்கள் மூளையை காப்ஃபைன் ஊக்குவித்து நம் பலன் உணர்வில் வெளிப்படையாக ஊக்கம் அதிகரிக்கும். அதனால் லேசாக தூண்டி விட்டாலும் நமக்கு எளித்தில் எரிச்சல் ஏற்படும். காபியை நிறுத்த முயற்சிப்பவர்களுக்கும், அவர்கள் காப்ஃபைன் உட்கொள்வதில் இருந்து பின்வாங்குவதால், அதுவும் எரிச்சலை உண்டாக்கும்.

தூங்குவதில் சிரமம் காபி குடிப்பது உங்களை விழித்திருக்கச் செய்யும். அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது உங்கள் தூக்க சுழற்சியை பாதிக்கும் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

இரவு நேரத்தில் போதிய தூக்கம் கிடைப்பதில்லை. அதற்கு காரணம் நீங்கள் அளவுக்கு அதிகமாக காபியை நம்பியிருப்பதால் தான்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது அடிக்கடி சிறுநீர் கழிப்பதை சிறுநீர்ப் பிரிப்பு (டையூரிடிக்) என கூறுவார்கள். காப்ஃபைன் என்பது டையூரிடிக்காகும்.

அதனால் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும் என்பது ஒன்றும் பெரிய ராக்கெட் சயின்ஸ் கிடையாது. இதன் தாக்கம் சிறிது நேரத்தில் போய் விடும் என ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் அதற்காக உங்கள் சிறுநீர்ப்பையுடன் பந்தயம் கட்ட போகிறீர்களா?

மார்பக வீக்கம் இனப்பெருக்க வயதில் பெண்களின் மார்பகங்கள் வீக்கமடைவது இயல்பான ஒன்றே. இருப்பினும், இதன் வளர்ச்சியில் காபியும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் கட்டியினால் வலியும் ஏற்படும். நீங்கள் அன்றாடம் குடிக்கும் காபியின் அளவை குறைத்தாலே இந்த கட்டிகள் மறையத் தொடங்கும்.

உடல் வறட்சி ஏற்கனவே சொன்னதை போல் காபி என்பது டையூரிடிக்காகும். அதனால் அதிகமாக காபி குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். இப்படி அதிகமாக சிறுநீர் கழிப்பதால் டீ-ஹைட்ரேஷன் என்னும் உடல் வறட்சி ஏற்படும்.

நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் குறைந்து, உடலின் சமநிலையை இது பாதிக்கும். அப்படியானால் ஒரு நாளைக்கு எத்தனை கப் குடிக்கலாம்? 3-4 கப் மட்டுமே!

அதிகரிக்கும் இரத்த கொதிப்பு காபி குடித்த உடனேயே உங்களின் இரத்த கொதிப்பு உயர்ந்திடும். காப்ஃபைன் அதிகமான அளவில் அட்ரீனலினை சுரக்கும். இதனால் உங்கள் மெட்டபாலிசம் அதிகரித்து, உங்கள் இரத்த கொதிப்பும் உயர்ந்திடும்.

காபி குடித்து பழகியவர்களுக்கு அவ்வளவு வேகமாக உயர்வதில்லை. இது காபியினால் ஏற்படும் தீமையாக கருதப்படவில்லை என்றாலும் கூட பாதுகாப்பாக இருப்பது நல்லது தானே.

மாரடைப்பு ஏற்படலாம் காபி குடிப்பது அதிகரித்தால் உங்கள் இரத்த கொதிப்பு அதிகரிக்கும். இதயகுழலிய நோய்கள் உள்ளவர்களை இது வேகமாக தாக்கும்.

பலவீனமான இதயம் கொண்டவர்கள் மீது ஆபத்தை விளைவிக்கும் தாக்கங்களை அது ஏற்படுத்தும். சில நேரத்தில் அது மரணத்தில் போயும் முடியும்.

பிரமை/மாயத்தோற்றம் காபியில் காப்ஃபைன் உள்ளதால் அதனை உளவியல் மருந்து எனவும் அழைக்கின்றனர். அதனால் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் அதனால் பிரமை உணர்வு ஏற்படுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இல்லாத ஒன்றை கேட்கவும் உணரவும் செய்வீர்கள். அதிகளவிலான அட்ரீனலின் உங்களின் காரண ஆய்வு ஆற்றல்களை பாதித்து பல விதமான மாய தோற்றங்களை காண்பிக்கும்.

எலும்புத்துளை நோயை (ஆஸ்டியோபோரோசிஸ்) உண்டாக்கும் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் கால்சியத்தை உறிஞ்சும் உங்களின் செரிமான பாதையின் ஆற்றல் பாதிக்கப்படும். நாளடைவில், அளவுக்கு அதிகமான காப்ஃபைன் உங்களின் உங்களின் எலும்பு கனிம அடர்த்தியை குறைக்கும். இதனால் எலும்புத்துளை நோய் ஏற்படும்.

அடிக்கடி சிறுநீர் போவதாலும் கால்சியம் குறையும். அதனால் அதன் டையூரிடிக் குணங்களும் இதற்கு காரணமாக உள்ளது. அதனால் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டும் காபி குடித்து ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள்.