Author Topic: ~ இதயத்தில் நடக்கும் அதியசம் ~  (Read 410 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226862
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இதயத்தில் நடக்கும் அதியசம்

நம் உடல் உறுப்புகளில் இதயம் மிகவும் முக்கியமானது. இதயத்தின் வலது புறத்தில் 2, இடதுபுறத்தில் 2 என நான்கு அறைகள் உள்ளன. இடது பக்க அறைகளில் சுத்த இரத்தமும் வலதுபுற அறைகளில் அசுத்த இரத்தமும் உள்ளன. அசுத்த இரத்தம் வலது புற அறைகளில் இருந்து நுரையீரலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு சுத்தமாக்கப்பட்டு இதயத்தின் இடதுபுற அறைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து உடலின் பல பாகங்களுக்கு இரத்தக்குழாய்கள் மூலம் இரத்தம் சென்றடைகிறது. இதயம் சுருங்கி விரிவதால் இந்நிகழ்ச்சி நடைக்கிறது.
சுத்த இரத்தமும் அசுத்த இரத்தமும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால் அது ஆபத்தானது. மரணத்திற்கே காரணமாகிவிடும்.
தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் போது நுரையீரல் வேலை செய்யாதிருப்பதால் இரத்தத்தை சுத்தமாக்கும் பணி குழந்தையின் இதயத்தில் நடைபெறுவதில்லை. எனவே இதயத்தின் இடப்பக்க, வலப்பக்க அறைகளுக்கிடையில் ஒரு இணைப்பு காணப்படும். இந்த இணைப்பு இருப்பதால் தாயின் உடலில் இருந்து சுத்த இரத்தம் குழந்தையின் இதயத்தை அடைந்து அங்கிருந்து குழந்தையின் உடலுக்கு சென்று அசுத்தமடைந்து மீண்டும் தாயின் உடலுக்குள் சென்றடையும். எனவே குழந்தையின் இதயத்தில் அசுத்த இரத்தம் இருப்பதில்லை. குழந்தையின் இதயம் இரத்தத்தை கடத்திவிடும் குழாயாகவே செயல்படுகிறது.
குழந்தை பிறந்தவுடனேயே முதல் மூச்சு விடும்போது நுரையீரல் வேலை செய்ய ஆரம்பித்து விடும். இப்போது பிறந்த குழந்தையின் இதயத்தின் இடது அறைகளில் சுத்த இரத்தமும் வலது அறைகளில் அசுத்த இரத்தமும் வந்துவிடும். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது இருந்த வலது, அடது அறைகளை இணைக்கும் இணைப்பில் அசுத்த இரத்தமும், சுத்த இரத்தமும் கலந்துவிடும் அபாயம் குழந்தையின் இதயத்தில் உண்டு. ஆனால் அந்த இணைப்பு துவாரத்தை ஒரு சவ்வு மூட ஆரம்பித்து விடுவதால் இந்த அபாயம் நிகழ்வதில்லை. இந்த சவ்வு எப்படி உடனே வளர ஆரம்பித்து சுத்த இரத்தமும், அசுத்த இரத்தமும் கலக்காமல் தடுக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புதிராவே உள்ளது. குழந்தை பிறந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 600 முறை இதயம் துடிக்கிறது.