Author Topic: ~ வீட்டு தளபாடங்களை தாமாகவே இடம் நகர்த்தக்கூடிய ரோபோக்கள் கண்டுபிடிப்பு ~  (Read 640 times)

Offline MysteRy

வீட்டு தளபாடங்களை தாமாகவே இடம் நகர்த்தக்கூடிய ரோபோக்கள் கண்டுபிடிப்பு

தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்து வரும் ரோபோ புரட்சியில் மற்றுமொரு ரோபோ தொழில்நுட்பம் இணைந்து கொண்டுள்ளது. அதாவது வீட்டிலுள்ள தளபாடங்களை தாமாகவே ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்கு நகர்த்தக்கூடிய இன்டலிஜன்ட் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றினை சுவிட்ஸர்லாந்திலுள்ள Biorobotics Laboratory இலுள்ள விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்கள் ஒவ்வொன்றும் நகருவதற்கு ஏற்றவாறு 3 மோட்டர்களையும், தளபாடங்களில் ஏறுவதற்காக மடிப்புக்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.